E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இங்குள்ளவர்களாலேயே எங்களுக்கு வேதனை : மீனவர்கள் பாய்ச்சல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

21 மார்
2013
01:09
பதிவு செய்த நாள்
மார் 20,2013 23:08

நாகப்பட்டினம்: தமிழக கடல் பகுதியில் அத்துமீறிய இலங்கை கடற்படையினர், நாகை மீனவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டி விரட்டிய சம்பவம், மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.நாகை, நம்பியார் நகரைச் சேர்ந்த கன்னையன், 45, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், நேற்று முன்தினம் மதியம், ஆறு மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், கோடியக்கரை கடல் பகுதியில், தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டுஇருந்தனர். விசைப்படகில் வந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த மூவர், இவர்களது படகில் இறங்கி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில், நான்கு பேர் படுகாயமடைந்தனர். சிறுவர்களாக இருவர் இருந்ததால், அவர்களை வெட்டாமல் விட்டு சென்றனர்.
படுகாயமடைந்தவர்களை, அருகில் மீன்பிடித்துக் கொண்டுஇருந்தவர்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், மூவர், மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவர், நாகை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:
இந்திய கடல் எல்லைக்குள், இலங்கை கடற்படையினர் வந்து தாக்கியதற்கு, சமீபகாலமாக, தமிழகம் வரும் புத்த பிட்சுகள் மற்றும் சிங்களர்களை, இங்குள்ள ஈழ ஆதரவு இயக்கங்கள் தாக்குதல் நடத்துவதன் எதிரொலி தான். இங்குள்ளவர்கள் அரசியல் நடத்துவதற்காக நடத்தும் நாடகத்தில், பாதிக்கப்படுவது தமிழக மீனவர்கள் தான்.இவ்வாறு கடும் வேதனையுடன் மீனவர்கள் கூறினர்.

புதுக்கோட்டை பகுதியிலும்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் நடத்திய கொலைவெறி தாக்குதலில், எட்டு பேர் பலத்த காயம்அடைந்தனர். அடுத்தடுத்து நடந்துள்ள தாக்குதல் சம்பவம் அம்மாவட்ட மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், அய்யப்பட்டி கடற்கரை கிராமத்தில் இருந்து, நேற்று முன்தினம், 50 நாட்டுப் படகுகளில், 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். இவர்கள் அனைவரும் இந்திய கடல் எல்லைக்குள், 15 கடல் மைல் தொலைவில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவி வந்த இலங்கை கடற்படையினர், இரண்டு நாட்டுப் படகுகளை சுற்றி வளைத்து அதிலிருந்த மீனவர்களை, பட்டாக் கத்தி, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களால், தாக்கினர். இதில், எட்டு பேர், பலத்த காயமடைந்தனர்.ஆத்திரம் அடங்காத இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்கள் மற்றும் வலை உள்ளிட்ட உபகரணங்களை, கடலுக்குள் தூக்கி வீசி, தப்பிச் சென்றனர்.படுகாயத்துடன், நேற்று அதிகாலை கரை திரும்பிய மீனவர்கள், எட்டு பேரும், ஜெகதாப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் குறித்து கடலோர காவல்படை, மீன்வளத் துறை மற்றும் ஜெகதாப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் நாட்டுப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் முற்றுகை போராட்டம்

தாங்கள் சிறைபிடித்த, குமரி மீனவர்களை, தங்களுக்கு தெரியாமல், ஊருக்கு அனுப்பியதைக் கண்டித்து, மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, தூத்துக்குடி மீனவர்கள், போராட்டம் நடத்தினர்.தூத்துக்குடி மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட, கன்னியாகுமரி மீனவர்கள் 61 பேர், அதிகாரிகளின் உத்தரவுப்படி, அவர்களது ஐந்து படகுகளில், நேற்று காலை, ஊருக்கு அனுப்பப்பட்டனர்.இதையறிந்த, தூத்துக்குடி மீனவர்கள் விசைப்படகுகளில், குமரி மீனவர்களை துரத்தினர்.அவர்களின், மூன்று படகுகள் தப்பிய நிலையில், இரு, தூத்துக்குடி படகுகள் மட்டும், வ.உ.சி., துறைமுகத்திற்குள் சென்று தஞ்சம்அடைந்தன.அவர்களை பிடித்த, துறைமுக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தெர்மல் நகர் போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில், தங்களுக்குத் தெரியாமல், குமரி மீனவர்களை, ஊருக்கு அனுப்பியதைக் கண்டித்து, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், மீன்வளத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
அது தொடர்பாக, அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், உடன்பாடு ஏற்படவில்லை; மீண்டும் பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanakumar - singapore,சிங்கப்பூர்
22-மார்-201300:22:55 IST Report Abuse
saravanakumar better all fisherman say we will not vote in parliment election . do this protest .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
21-மார்-201304:22:20 IST Report Abuse
Skv மீனவர்களுக்கு அடி உதை சிங்களவர்க்கு ரஜோபசாரமா . அவன் ஆடும் ஆட்டத்தை கண்டுக்காத அரசு சுற்றுலா வந்தவங்களுக்கு சாமரம் வீசுது.
Rate this:
8 members
0 members
33 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
21-மார்-201304:13:36 IST Report Abuse
NavaMayam அய்யா இங்குள்ள தமிழக அரசியல் வாதிகள் தனி ஈழம் ஒன்றே வழி என்று மறுபடியும் ஒரு ஆயுத போராத்தை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற பயம்தான் எல்லை தாண்டி வருபவன் எல்லாம் தீவிர வாதிகளோ , மீண்டும் புலிகள் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவி விடுவார்களோ என்ற அச்சம் தான் இந்திய மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு காரணம் ,,, இதை மறைத்து இன்னும் இன வெறியைத்தூண்டிகொண்டிருந்தல் தமிழ்க மீனவர்களுக்கு விடிவுகாலமே இல்லை ....
Rate this:
54 members
0 members
53 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
21-மார்-201303:25:09 IST Report Abuse
NavaMayam கொஞ்ச காலம் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் பற்றி பேசுவதை தடை செய்ய வேண்டும்...இவர்கள உண்மையிலேயே தமிழக மீனவர்கள் தாக்க படுவதை பற்றி கவலை இல்லை ... அது தொடர்ந்தால் தான் மத்திய அரசு மீது பழி சுமத்தி , தமிழக மக்களின் உணர்ச்சியை தூண்டி அரசியல் லாபம் அடைவதே குறிகோளாக உள்ளவர்களை ......இப்போது இந்திய மீனவர்கள் உணர்ந்து , தாங்கள் தாக்க படுவதற்கு தமிழக ஆரசியல் வாதிகளின் செயலே காரணம் என்று பகிரங்கமாக சொல்லிய பிறகாவது , தமிழக அரசியல் வாதிகள் தங்கள் குறுகிய கண்ணோட்ட அரசியலை நிறுத்த வேண்டும்....
Rate this:
128 members
0 members
69 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
21-மார்-201302:58:12 IST Report Abuse
விருமாண்டி நம் தமிழர்களின் துன்பத்தை போக்க யாரும் முன்வரவில்லை .. நம் தமிழர்களின் பிரச்னையை கவனத்தில் கொள்ளாமல் வெறும் இலங்கை தமிழர்களின் பிரச்சனையை மட்டும் பிரச்சனையாக பார்க்கிறார்கள் நம் தமிழ்நாட்டு மக்கள் .. இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டியை இலங்கையில் போர் நடைபெற்ற போது கூட இலங்கை தமிழர் பிரச்சனை என்றால் என்ன என்று தெரியாத மாணவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் எல்லாத்துக்கும் மீடியாக்கள் தான் காரணம் .. இப்போது இலங்கை வீரர்கள் பங்கு பெரும் ஐபிஎல் போட்டியை முதல் வரிசையில் காண இதே மக்கள் ஆவலாக உள்ளனர் .. என்ன கொடும சார் இது .
Rate this:
93 members
2 members
58 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
21-மார்-201302:48:17 IST Report Abuse
விருமாண்டி இது முற்றிலும் உண்மை ... இலங்கை தமிழர் பிரச்சனை என்று அதிகம் பேசி நம் மீனவர்களை நாம் யோசிப்பதே இல்லை .. இது போல் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்தியதும் இல்லை நம் மீனவர்களையும் விவசாயிகளையும் மறந்து விட்டோம் என்று தான் கூற வேண்டும் ...
Rate this:
89 members
0 members
53 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
21-மார்-201302:44:49 IST Report Abuse
Vettri மீனவர்களே இலங்கை கடற்படையை நீங்கள் ஏன் திருப்பி தாக்க கூடாது. குட்ட குட்ட குனிவதை விட ரெண்டு பேரையாவது பிடித்து குனிய வைத்து கும்மி அடிச்சிட்டு வாங்க.
Rate this:
3 members
1 members
184 members
Share this comment
Cancel
Bala Subramani - Pittsburgh,யூ.எஸ்.ஏ
21-மார்-201302:43:55 IST Report Abuse
Bala Subramani மீனவர்களும் இனிமேல் ஆயுதம் ஏந்தி மீன் பிடிக்க சென்றால் தான் நல்லது.
Rate this:
2 members
3 members
219 members
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
21-மார்-201302:33:05 IST Report Abuse
Vasanth Saminathan இவ்ளோ நாள் அடிபட்டதுக்கு உயிர் போனதுக்கு ஒரு முடிவு கட்டத்தானே இந்த போராட்டம். நீங்களே இதை நீர்த்து போகச்செய்தால் எப்படி? நீங்களும் போர்க்கொடி தூக்குங்கள். இலங்கை மீது இந்தியா கடும் எச்சாரிக்கை விட வேண்டும் மீறினால் போர் தொடுக்க வேண்டும்.
Rate this:
8 members
0 members
76 members
Share this comment
Cancel
B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்
21-மார்-201302:19:49 IST Report Abuse
B Sivanesan தமிழ் வீரர்களின் கருத்துக்கள் எங்கே...தமிழ் வீரர்களை படகில் ஏற்றி மீனவர்களுக்கு காவலாக அனுப்ப வேண்டும்.
Rate this:
6 members
0 members
44 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.