karunandihi explin to Chidambaram | விலகல் ஏன்? : சிதம்பரத்திற்கு கருணாநிதி விளக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விலகல் ஏன்? : சிதம்பரத்திற்கு கருணாநிதி விளக்கம்

Updated : மார் 20, 2013 | Added : மார் 20, 2013 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிதம்பரத்திற்கு கருணாநிதி விளக்கம்

சென்னை: மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., ஏன் விலகியது என்பது குறித்து, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.அவரது பேட்டி:"கடந்த, 18ல் இரவுக்கும், 19ல் காலைக்கும் இடையே என்ன நடந்து விட்டது. எதற்காக, தி.மு.க., தன் நிலையை மாற்றிக் கொண்டது, எங்களுக்குத் தெரியாது' என, சிதம்பரம் கூறியுள்ளார். 18ல் இரவு, குலாம் நபிஆசாத் நிருபர்களிடம் கூறுகையில் கூட, "நடந்த விவகாரத்தைப் பிரதமரிடமும், சோனியாவிடமும் தெரிவிப்போம்' என்றார்.நாங்கள் கூறியதை ஏற்று, பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றோ, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில், நாங்கள் கோரிய திருத்தங்களைச் சேர்க்க முயற்சிப்போம் என்றோ, அவர் கூறவில்லை.
மறு நாள் காலையில், திருத்தப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் கிடைத்தது. அதில், இலங்கை அரசுக்கு எதிராக, எந்த விதமான கடுமையான வார்த்தைகளும் இடம் பெறவில்லை என்ற, ஊர்ஜிதமான தகவல்கள் கிடைத்தன.அந்தத் தகவலின் படி, தீர்மானத்தில் நாங்கள் கேட்ட திருத்தங்ளை, இணைப்பதற்கான வாய்ப்பு அறவே அற்றுப் போய் விட்டதாகவே எங்களுக்குத் தெரிந்தது. தி.மு.க.,வின் அறிவிப்புக்கு இவை தான் காரணமே தவிர வேறல்ல."அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்' என, சிதம்பரம் சொல்வது சாத்தியமா என, தெரியவில்லை; அதற்கு காலம் இன்னமும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.எழுத்துப் பூர்வமாக, திருத்தம் கொடுப்பதற்கான காலக்கெடு முடிந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனால், சிதம்பரம் கூறுகையில், பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி, கமல்நாத் மற்ற கட்சிகளுடன் பேசியதாகவும், பலர் ஆதரிக்கவில்லை என, சொல்லியிருப்பதும், கவனத்தில் கொள்ளத்தக்கது.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - tirunelveli,இந்தியா
26-மார்-201312:45:41 IST Report Abuse
sankaranarayanan கூடா நட்பு முறிய இத்தனை நாளா - எப்படியோ கேடாய் முடிந்தால் சரி
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
21-மார்-201305:59:54 IST Report Abuse
venkat Iyer இந்தியாவில் அரசியல் பிரச்சினை அதிகமாகிவிட்டது என்று வேர்ல்ட் டைம்ஸ் கூறியது சரிதான்.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
21-மார்-201305:51:07 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி ஐயா நீங்க இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தீங்க என்று சொன்னால், இன்னும் சமரசம் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கு என்று சமிக்கை காட்டுவதாக தெரிகிறது......
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
21-மார்-201305:50:34 IST Report Abuse
mangai இதெல்லாம் நம்புறதுக்கு நாங்க என்ன லூசா.... என்னைக்கு நீ உண்ட பின் விரதம் இருந்தியோ அப்பவே நாங்க ஒரு முடிவுக்கு வந்துட்டோம்.. இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு.. நீ வேற எதாவது ட்ரை பண்ணு பெருசு..
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
21-மார்-201305:46:13 IST Report Abuse
villupuram jeevithan அழகிரி தனிமை படுத்தப் படவேண்டும் என்பது தான் நோக்கம். ஈழம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
21-மார்-201305:44:04 IST Report Abuse
villupuram jeevithan தீர்மானம் என்னவென்று கூட தெரியாமல் கடந்த இரண்டு வாரங்களாய் அமெரிக்காவை ஆதரிக்க சொல்லி பிரச்சாரம்? பாவம்? இப்போது திருத்தம் என்கிறார்?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
21-மார்-201305:42:46 IST Report Abuse
villupuram jeevithan திருத்தத்திற்கு வாய்ப்பு இல்லை என்பது இவருக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டதாம்? நம்புங்கள்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
21-மார்-201305:40:03 IST Report Abuse
K.Sugavanam .அட காரணத்த சொல்லிட்டார் பெருசு..நம்பறதும் நம்பாததும் பகுத்தறிந்தவனுக்கு சுலபம் ..
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
21-மார்-201305:14:55 IST Report Abuse
Sekar Sekaran இதெல்லாம் வெளியே தெரியும் ஒருவிதமான அரசியல் அறிக்கை மட்டுமே..ஆனால் இது முழுக்க முழுக்க ஸ்டாலினின் திட்டமிட்ட சதியே..அழகிரியை பதவி இழக்க..அப்பாவை பயன்படுத்தி..காரணங்களை சொல்லி..அமைச்சர்களை தானாய் பதவி விலக செய்துள்ளார். எத்தனை முறை பார்த்துள்ளோம் கருணாவின் ராஜினாமா நாடகத்தினை..இப்போது மட்டும் ரோஷம் வந்துவிட்டதா என்ன? அழகிரியை பழிவாங்க ஸ்டாலினின் சதியை தவிர திமுகவின் கருணைபார்வை ஈழத்து மக்கள் மீது விழுந்துவிட்டதாய் தப்பாக நினைக்க வேண்டாம்..
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
21-மார்-201305:06:56 IST Report Abuse
Samy Chinnathambi கட்டுமர தாத்தா பல வருடங்களாக மத்திய அரசில் விடா பிடியாக பங்கு வகித்ததும், இப்போது ராஜினாமா நாடகம் ஆடுவதும் கீழ் கண்ட அவரது சொத்துகளை பெருக்க மற்றும் காப்பாற்றி கொள்ள தான். காங்கிரஸ் கவிழும் என்று தெரிந்தவுடன் அடுத்து ஆளும் கட்சியிடம் துண்டு போட்டு தனது சொத்துகளை காப்பாற்றி கொள்ள தான்...நீங்களே பாருங்கள் அவரது சொத்துக்களை.... 1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி. 2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி. 3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி. 4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி. 5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி. 6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி. 7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி. 8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி. 9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி. 10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி. 11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி. 12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி. 13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி. 14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி. 15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி. 16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி. 17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி. 18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி. 19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி. 20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி. 21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி. 22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி. 23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி. 24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி. 25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம். 26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி. 27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை. 28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை. 29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை 30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை 31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார். 32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை. 33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை. 34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி. 35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம் 36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி. 37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி. 38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி. 39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம். 40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம். 41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி. 42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி. 43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி. 44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம். 45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம். 46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம். 47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம். 48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி. 49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம். 50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி. 51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 3 கோடி. 52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி. 53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி. 54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி. 55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை. 56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை. 57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி. 58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது. 59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி. 60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி. 61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது. 62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி. 63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை 64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை. 65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது. 66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே. 67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது. 68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள். 69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
Rate this:
Share this comment
pattikkaattaan - Muscat,ஓமன்
23-மார்-201312:37:30 IST Report Abuse
pattikkaattaan ஸ்ஸ்ஸ்... அப்பா சாமீ.... இப்பவே கண்ண கட்டுதே ... முடிலேடா சாமீ ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை