புதுடில்லி: மத்திய அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும், '' என, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். அதே நேரத்தில், இலங்கை தமிழ் சகோதரர்கள் நலனுக்காக, மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையையும் ஆதரிக்க தயாராக இருப்பதாக, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றதை அடுத்து, டில்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "ஐ.மு., கூட்டணி அரசு கவிழப் போகிறது; லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்கப் போகிறது' என்பது போன்ற, தகவல்கள் வெளியாகின்றன.இதுகுறித்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி கூறியதாவது:மத்திய அரசுக்கு, பகுஜன் சமாஜ் கட்சி வெளியில் இருந்து, ஆதரவு அளித்து வருகிறது. இந்த ஆதரவு தொடரும். தற்போதுள்ள குழப்பமான அரசியலை பயன்படுத்தி, ஆதாயம் பெற விரும்பவில்லை. ஆனால், அமைச்சரவையில் சேர மாட்டோம்.தே.ஜ., கூட்டணியைச் சேர்ந்த சில கட்சிகள், எங்கள் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. சி.பி.ஐ.,யை, தவறாக பயன்படுத்தி, பகுஜன் சமாஜ் ஆதரவை, காங்கிரஸ் பெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது.
இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான, தாரிக் அன்வர்,""மத்திய அரசுக்கு கடந்த காலங்களிலும், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அப்போது, சிக்கல்களில் இருந்து மீண்டு வந்ததைப் போல, தற்போதும் மீண்டு வரும்,'' என்றார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் கூறுகையில்,"" தி.மு.க. விலகியதால், மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும்பான்மையுடன், பலமாக உள்ளது,'' என்றார்.சமாஜ்வாதி கட்சி தலைவர், முலாயம் சிங் யாதவ், நேற்று டில்லியில், மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்., தலைவருமான, சரத்பவாரை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.இதுகுறித்து, முலாயம் சிங் கூறுகையில், ""நானும், சரத்பவாரும், மீண்டும் சந்தித்து பேசவுள்ளோம்' என்றார்.இந்த சந்திப்பு காரணமாக, முலாயம் சிங் யாதவும், சரத் பவாரும், காங்கிரசுக்கு எதிரான நிலையை, மேற்கொள்ளப் போகின்றனரோ என்ற, பரபரப்பு நிலவி வருகிறது.திரிணமுல் காங்கிரஸ் தலைவர், மம்தா பானர்ஜி கூறும் போது, ""இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் ஆதரிக்க தயார். இலங்கை, தமிழ், சகோதர, சகோதரிகள் நலனுக்காக எங்கள் கட்சி பாடுபடும். எனினும், இந்திய வெளியுறவுத்துறையின் கொள்கை விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம்,'' என தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இப்போதைய பிரச்சினை காங்கிரசுக்கு ஆதரவு பற்றியதில்லையே......மத்திய வெளியுறவு கொள்கை சம்பந்தப்பட்டது தானே......அதில் தலையிட மாட்டோமேன்றால்.......மத்திய அரசை ஆதரிப்பதாக தானே அர்த்தம். அமெரிக்கர்களுக்கு தெரிந்த இலங்கை கொடுமைகள் இங்குள்ள இந்தியர்களுக்கு தெரியாமல் போவது ஆச்சர்யம் தான். சிங்களர்கள் வட இந்தியாவிலிருந்து போனவர்கள் என்பதால், ஒன்றுமே தெரியாதது போல நடிக்கிறார்களா....... இப்போது ஒரு அச்சம் எழுகிறது, இதை வைத்து தமிழகத்தை தீவிரவாதிகள் மாநிலமாக மாற்ற முயற்சி நடக்கிறதா என்று....இப்படி ஒரு நிலைக்கு ஆளாக கூடாது என்று பொறுமை காத்து வந்த திமுகவையும் உசுப்பேத்தி வெளியேற்றி இருக்கிறார்கள்....இது நல்லதுக்கல்ல.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.