மின் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு அறிவித்த திட்டம் மூலம், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களில் உள்ள, அனல் மின் நிலையங்களை நவீனப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பெருக்கத்தால், மின் தேவையின் அளவு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனி நபரின் மின் நுகர்வும் உயர்ந்து வருகிறது. இதற்கு ஈடு கொடுக்கும் வகையில், மின் உற்பத்தி இல்லை.பருவ மழையின்மை, எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால், புனல் மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு, குறைந்து வருகிறது.நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களின் மொத்த உற்பத்தி திறன், 1.21 லட்சம் மெகா வாட். மின் உற்பத்தியில், 50 சதவீத அனல் மின் நிலையங்கள், மாநில அரசுகளுக்கு சொந்தமானவை. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில், 57.3 சதவீதம் நிலக்கரி மூலம் கிடைக்கிறது.அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி தட்டுப்பாடு, விலை உயர்வு, தொடர் பராமரிப்பின்மை போன்ற காரணங்களால், அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி குறைந்து வருகிறது. கருவிகளின் ஆயுள் காலத்தை கடந்து, மின் உற்பத்தியை செய்தல், தொடர் பராமரிப்பின்மை போன்ற காரணங்களாலும், அனல் மின் நிலையங்கள், முழு உற்பத்தி திறனை எட்டுவதில்லை.விரிவான திட்ட அறிக்கைமின் பற்றாக்குறையைப் போக்க,
அனல் மின் நிலையங்களில் நிலவும் இடர்பாடுகளை களைந்து, முழு கொள்ளளவை எட்டுதல், தடை இன்றி மின் உற்பத்தையை செய்தல் ஆகியவை, இன்றியமையாததாக உள்ளன.இதற்காக, மத்திய மின் ஆணையம், நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களின்
தற்போதைய நிலை குறித்து, ஆய்வு மேற்கொள்கிறது. தொடர்ந்து, அனல் மின்
நிலையங்களை புனரமைத்தல்,நவீனப்படுத்துதல், ஆயுள் காலத்தை நீட்டித்தல் ஆகிய பணிகளையும் மேற்கொள்ள
திட்டமிட்டுள்ளது.இப்பணிகளுக்காக, முதல்கட்டமாக விரிவான திட்ட அறிக்கையை
தயாரிக்கிறது. திட்டஅறிக்கையை தயார் செய்ய, மின் உற்பத்தித் துறையில் அனுபவம் உள்ள நிறுவனங்களுக்கு, மத்திய மின் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.இத்திட்டத்தில், தமிழகத்தில் உள்ள எண்ணூர், மேட்டூர், வடசென்னை, தூத்துக்குடி, நெய்வேலி ஆகிய அனல் மின் நிலையங்களை நவீனப்படுத்துதல், மின் உற்பத்தியை அதிகரித்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.இதுகுறித்து, மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல்வேறு மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள், ஆயுட்காலத்தை கடந்தும் இயங்குகின்றன. தமிழகத்தில், எண்ணூர் அனல் மின் நிலையத்தின் ஆயுட் காலம் முடிந்ததால், அதை சீரமைப்பதற்கு, தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
Advertisement
30 ஆயிரம் மெகா வாட்அனல் மின் நிலையங்களை சீரமைத்து,
நவீனப்படுத்துதன் மூலம், 10 முதல் 15 சதவீதம் வரை, மின் நிலையத்தின்
வெப்பத் திறனை அதிகரிக்க முடியும். வெப்பத் திறனை அதிகரிப்ப தால், நிலக்கரி சேமிக்கப்படுவதோடு, அனல் மின்
நிலையங்களில் இருந்து வெளியேறும், கார்பன் டை ஆக்சைடின் அளவையும்
கட்டுப்படுத்த முடியும். சீரமைப்பு, நவீனப்படுத்தல் மூலம், 30 ஆயிரம் மெகா
வாட் அளவிற்கு, மின் உற்பத்திஅதிகரிக்கும் வாய்ப்புஉள்ளது என, மத்திய மின் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரு கட்டங்கள்சீரமைத்தல், நவீனப்படுத்தல் திட்டத்துக்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வது, இரு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் மின் உற்பத்தியை அதிகரித்தல் குறித்தும்; இரண்டாம் கட்டத்தில், நிதி ஆதாரங்கள் பற்றியும், திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க விருப்பமுள்ள நிறுவனங்கள், ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்க, இம்மாதம், 31ம் தேதி கடைசி நாள். ஒப்பந்தப் புள்ளியில் தேர்வாகும் நிறுவனம், நாட்டில் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களுக்கும் சென்று, மத்திய மின் ஆணைய வழிக்காட்டுதலில் படி, ஆய்வு பணியை மேற்கொள்ளும்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -