மதுரை:""மதுரை தத்தனேரி மயானத்தில் ரூ.50 லட்சத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என மத்திய தொகுதி எம்.எல்.ஏ., சுந்தரராஜன் தெரிவித்தார்.இம்மயானத்திற்கு, இறுதி சடங்கு செய்ய வரும் மக்களுக்கு தண்ணீர் உட்பட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என்று தினமலர் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அடிப்படை வசதிகள் குறித்து சுந்தரராஜன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். மாநகராட்சி உதவி கமிஷனர் காமராஜ், கவுன்சிலர் தாஸ் உடனிருந்தனர்.எம்.எல்.ஏ., கூறியதாவது:மயானம் எனது தொகுதிக்குள் உள்ளது. தினமலர் நாளிதழில் செய்தி வெளியானவுடன், மேயர் ராஜன்செல்லப்பாவிடம் பேசினேன். அங்கு கூடுதலாக 2 இடங்களில் "போர்வெல்' அமைப்பது, சுற்றுச்சுவர் கட்டுவது, தியான மண்டபத்தை சுற்றி பூங்கா அமைத்து அழகுபடுத்துவது, சமுதாய கூடம் கட்டுவது போன்ற பணிகள், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் மேற்கொள்ளப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.