"குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே பக்தி உணர்வை ஊட்ட வேண்டும்'| Dinamalar

தமிழ்நாடு

"குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே பக்தி உணர்வை ஊட்ட வேண்டும்'

Added : மார் 21, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:""குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பக்தி உணர்வை ஊட்ட வேண்டும்,'' என்று திருச்சி கல்யாணராமன் வலியுறுத்தினார். மதுரையில் பாரதி யுவகேந்திரா சார்பில் நடந்த "அவந்தி மாநகர அந்தணனும் துவாரகா நாதனும்' தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவு:நாம் அனைவரும் ஹரியின் பக்தர்கள். தொண்டர்கள் உணர்வுடன் வாழ வேண்டும். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பக்தி உணர்வை ஊட்ட வேண்டும். நாம் எந்த விதத்திலும் மேதை கிடையாது. அவ்வையார் கற்றது கை மண் அளவு என்றார். மனம் துன்மார்க்கத்துக்கு போகக்கூடாது. குடும்பத்தில் பெண்களிடம் பக்தி இருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் குடும்பம் கெட்டு விடும். கொடிது கொடிது வறுமை கொடிது. அதில் இளமையில் வறுகை மிகவும் கொடியது. குழந்தைகள் கஷ்டத்தை உணர்ந்து படிக்க வேண்டும். பசிக்கு சாப்பிடணும் ருசிக்கு சாப்பிட கூடாது. நாம் எப்பொழுதும் பிறருக்காக வேண்டும்போது நமக்கு சவுக்கியம் வந்து சேரும். நாம் உண்மையாக கடவுளிடம் பக்தி செலுத்தினால், கடவுள் நம் கண்முன் தோன்றி நமக்கு அருள் பாலிப்பார். நாம் மற்றவர்களின் கஷ்டத்தை கேட்கும் போது அதை நாம் நிவர்த்தி செய்ய முடியும் என்றால் கேட்கலாம். நண்பனிடம் தன்னுடைய ஏழ்மையை சொல்லி யாசகம் பெறக்கூடாது. ஒருவன் தன் நண்பன் ஏழ்மையாக இருந்தால் அந்த ஏழ்மையை கண்டு நாமாகவே வலிய சென்று உதவிட வேண்டும். நண்பன் தன்னிடம் வந்து கேட்கும்படி செய்யக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
21-மார்-201320:33:11 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி சில ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி பதவியில் இருந்தபோது முதல்வர் தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களும், இந்த கல்யாண ராமனும் கலந்து கொண்டனர்.... இந்த கல்யாண ராமன் கருணாநிதி பற்றி உயர்த்தி பேசி தன்னை மிகவும் விநயம் உள்ளவனாக காட்டிகொண்டு அவரிடம் மடிபிட்சை எல்லாம் மேடையிலேயே கேட்டு தன்னையும் தான் சார்ந்து இருக்கும் சமுதாயத்தையும் அசிங்கபடுதிய புண்ணியவான்... இவரை பற்றிய செய்திகளை தவிர்ப்பது நல்லது.....
Rate this:
Share this comment
Cancel
Muthukumar - Erode,இந்தியா
21-மார்-201319:29:46 IST Report Abuse
Muthukumar நல்ல விஷயம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை