தூத்துக்குடியில் வெளுத்து வாங்குகிறது வெயில் குளிர்பானங்கள் விற்பனை மூன்று மடங்கு அதிகரிப்பு| Dinamalar

தமிழ்நாடு

தூத்துக்குடியில் வெளுத்து வாங்குகிறது வெயில் குளிர்பானங்கள் விற்பனை மூன்று மடங்கு அதிகரிப்பு

Added : மார் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெயில் வாட்டி வதைக்க துவங்கியிருப்பதால் குளிர்பானங்கள் விற்பனையும், கம்மங்கூழ், மோர் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் வழக்கமான அளவை விட கூடுதலான பானைகளில் இயற்கை பானங்கள் தயாரித்து வந்து கொண்டிருக்கிறது.பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயில் மிக அதிகமாக இருக்கும். அந்த காலத்தில் தான் அக்கினி நட்சத்திர வெயில் காலமும் வரும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தட்பவெப்பநிலை மாற்றத்தால் எல்லாம் தலைகீழாகி கொண்டிருக்கிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழை பெய்வதில்லை. குளிர்காலத்தில் வெயில் அதிகமாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் தட்வெப்பநிலை மாறியுள்ளது. ஏதாவது புயல் சின்னம் உருவானால் தான் மழை பெய்யும் என்கிற நிலையில் பருவமழையும் பொய்த்து விட்டன. இது ஒருபுறம் இருந்து கொண்டிருக்கிற நிலையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் தற்போது முன் கூட்டியே வெயில் காலம் துவங்கி விட்டது என்று சொல்லும் அளவிற்கு தூத்துக்குடியில் வெயில் அனலாக வாட்ட துவங்கியுள்ளது. காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் வெயில் மாலை 4 மணியை தாண்டியும் விடுவதாக இல்லை என்பது போல் அடித்து கொண்டிருக்கிறது. இன்னும் அக்கினி நட்சத்திர வெயில் வருவதற்கு பல நாட்கள் இருந்து கொண்டிருக்கிற நிலையில் அட்வான்சாக அக்கினி வெயிலை விட அதிகமான வெயில் இப்போது தூத்துக்குடியில் அடித்து வருவது மக்களை கடும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதால் குடிநீர் தேவையும் அதிகரித்து விட்டன.குளிர்பானங்களில் கெமிக்கல் அதிகமாக இருக்கிறது. அதன் மூலம் உடல்நலத்திற்கு கேடு என்றாலும் இயற்கை பானங்களை மக்கள் விரும்புவதை விட கெமிக்கல் உள்ள குளிர்பானங்களை தான் மிக அதிகமாக விரும்புகின்றனர். தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்டில் பத்து பயணிகள் நின்றால் அதில் குறைந்தது நான்கு பேரிடமாவது குளிர்பான பாட்டில்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. அதே சமயம் வெயிலுக்கு இயற்கையான பானங்களாக கருதப்படும் கம்மங்கூழ், கேப்பை கூழ், சாதாரண நீர் மோர், நல்ல மோர், இளநீர், தர்பூசணி போன்றவையும் தற்போது வழக்கமான விற்பனையை விட மிகவும் அதிகரித்திருப்பதாக இதன் வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து கம்மங்கூழ் வியாபாரி ஒருவர் கூறுகையில், தினமும் தலா ஒரு மண்பானையில் கம்மங் கூழ், கேப்பை கூழ், நீர்மோர் கொண்டு வந்து காலை 7 மணிக்கு விற்பனையை துவக்குவேன். மாலை 5 மணி வரை ஆகிவிடும். ஆனால் தற்போது ஒவ்வொன்றும் மூன்று பானை அளவிற்கு 3 மடங்கு அதிகமாக கொண்டு வந்தாலும் மதியம் 3 மணியுடன் விற்பனை முடிந்து விடுகிறது. அந்த அளவிற்கு நல்ல விற்பனை இப்போதே ஆரம்பித்து விட்டது. இதனை பார்க்கும் போது அக்கினி வெயில் காலத்தில் தலா 5 பானை ஓடும் என்று எதிர்பார்க்கிறோம். குளிர்பான பாட்டில்களை பொறுத்தமட்டில் ஒரே சீராக எப்போதும் விற்பனை இருந்து கொண்டிருக்கும். தற்போது வெயில் காரணமாக கூடுதலாக விற்பனையாகும். ஆனால் மாதம், மாதம் ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் விலை ஏறி விடுகிறது. பஸ் ஸ்டாண்டில் ஒரு ரேட், வெளியிடங்களில் இன்னொரு விலை என்கிற அளவிற்கு தான் குளிர்பானங்கள் விற்பனை இருப்பதாக மக்கள் மத்தியில் புகார் கூறப்படுகிறது. இப்போதே அடிக்கிற வெயில் பயம் முறுத்தி கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மின்சார பிரச் னை வேறு இருந்து கொண்டிருக்கிற நிலையில் வெயில் காலத்தை எப்படி கழிக்கப் போகிறோம் என்று ஒருவொருக்கொருவர் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை