புதுடில்லி : 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டடைனயும் விதித்து, "தடா' கோர்ட் உத்தரவிட்டது. இவ்வழக்கில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது, ஆயுதங்களை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று வந்தது. அதில் சஞ்சய் தத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறை தண்டனையை 5 ஆண்டாக குறைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஏற்கனவே சஞ்சய் தத் 1.5 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டதால் மீதமுள்ள 3.5 ஆண்டு சிறைவாசம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதனிடையே இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான யாகுப் அப்துல் ரசாக்கிற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. மேலும் ஏற்கனவே 18பேருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையில் 16பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது. இவர்கள் சாகும் வரை சிறையிலேயே தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஜாமினில் வெளியே வந்தவர்கள் இன்னும் நான்கு வாரகாலத்திற்குள் மீண்டும் சிறையில் சரண்டர் ஆகவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எந்த வழக்கிலுமே நம் நாட்டில் வரும் தீர்ப்பை பார்த்துவிட்டு மக்கள் சொல்வது ...காலதாமதம் என்றுதான். காலதாமதம் என்பது எந்த விதத்திலும் ஒரு நிரபராதி பாதிக்கப்பட்டோ அல்லது தண்டிக்கப்படக்கூடாது என்பதே நோக்கம். எனவே தாமதத்தை பொறுத்தே ஆகவேண்டும். பாக்கி மூன்றரை வருடம் அனுபவித்து ஆக வேண்டுமல்லவா இந்த சஞ்சய் தத் .. இது தான் நீதி வெல்லும் என்பது.
நண்பரே அகிம்சையை இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் எல்லோரும் போதித்துள்ளர்கள். நாம் எல்லோரும் கசப்பான காலகட்டத்தை மறந்து ஒற்றுமையுடன் வாழவிட்டால் ஒருநாள் சீனாவுக்கோ, வேறொரு நாட்டுக்கோ அடிமையாகி விடுவோம். இப்பவே சீனவுடம் போர் வந்தால் இரண்டு நாளுக்கு மேல் வெடிபொருள் கைவசம் இல்லை. இந்த லட்சணத்தில் யாரையும் உசுப்பு ஏத்த வேண்டாம் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.