‘ சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’- கண்டுபிடிப்போம் என்கிறார் பிரதமர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: இன்றைய சி.பி.ஐ., ரெய்டுக்கு பின்புலமாக இருந்தது யார் என விசாரணை நடத்துவோம் எனவும், மு.க.ஸ்டாலின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து தான் அப்செட் ஆகியிருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். காலையில் சென்னையில் ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய ஹேமர் கார் குறித்து விசாரணை நடத்திட சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை, சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவை என்பது நிரூபணம் ஆகி விட்டது என பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சியினர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், காலையில் நடந்த ரெய்டு எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ரெய்டில் அரசியல் கலப்பு கிடையாது. சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த ரெய்டு துரதிருஷ்டவசமானது. இதன் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என கண்டறியப்படும் என்றார்.சோனியா விசாரித்தார்:

இந்த ரெய்டு குறித்து காங்., தலைவர் சோனியா, இந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நாராயணசாமியிடம் விவரங்கள் கேட்டறிந்தார். ஸ்டாலினுக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் இல்லை. யார், எதற்காக போயினர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.


சி.பி.ஐ,. விளக்கம்: இது முழு அளவில் விசாரணை கட்டத்தின் ஒரு படியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் எவ்வித குறுக்கீடும் இல்லை. எந்த ஒரு தனி நபரையும் குறி வைக்கும் நோக்கத்தில் இந்த ரெய்டு நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


17 சொகுசு கார்கள் பறிமுதல்: சி.பி.ஐ., இன்றைய ரெய்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் 17 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளதாக பி.டி.ஐ., நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சி.பி.ஐ.,யை மேற்கோள் காட்டி கூறப்பட்டிருக்கும் இந்த செய்தியில் 17 சொகுசுகார்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும, இந்த மோசடியில் ரூ. 48 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து வருவதாகவும், சில அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (30)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MUTHU A - Bangalore,இந்தியா
22-மார்-201300:17:06 IST Report Abuse
MUTHU A இந்த சிபிஐ பின்னால் இருப்பவர் சு.சாமி இவன்தான் அந்த சூத்திரதாரி ....
Rate this:
Share this comment
Cancel
mnathumitha - CA,யூ.எஸ்.ஏ
22-மார்-201300:00:01 IST Report Abuse
mnathumitha இலங்கை தமிழர் பிரச்சனையில் மாணவர்கள் போராட்டம் உச்ச கட்டத்தில் உள்ளநிலையில் இந்த சோதனை அதை திசை திருப்ப காங்கிரஸ் கட்சி திமுகவின் ஒப்புதலோடு நடத்தி இருக்கும் நாடகம் காங்கிரஸ் திமுக கூட்டணி இப்பொழுதும் கள்ள காதலாக தொடர்வதற்கு இது சான்று. மாணவர் போரட்டத்தை மட்டுமே முன்னிலை படுத்தும் மீடியாகளை திசை திருப்ப திமுக காங்கிரஸ் நடத்திய கூட்டு நாடகம். இந்த சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை ஸ்டாலின் சுத்தமானவர் என்று அறிக்கை விரைவில் சிபிஐ அதிகாரிகள் மூலம் வரும். சிபிஐ தன்னிச்சையான அமைப்பு என்றால் ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு பிரதமரும், நிதி அமைச்சரும் கண்டனமும், வருத்தமும் தெரிவிப்பது ஏன்? முறை கேடக கார் இறக்குமதி செய்த 37 பேர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி உள்ளது அதில் ஸ்டாலின் வீடும் ஒன்று. இவை எல்லாம் இந்த சிபிஐ சோதனை ஒரு நாடகம் என்பதை மேலும் உறுதி படுத்துகின்றன. இந்த ஊமை கோட்டான் மன்மோகன் (மண்) தமிழக மாணவர் போராட்டத்திற்கு வாய் திறக்காமல் இன்று ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குகிறதே ஆகவே இவை எல்லாம் மாணவர்கள் போராட்டத்தை திசைதிருப்ப செய்த சூழ்சிகள்
Rate this:
Share this comment
Cancel
Kannimozhi Kavitha - Ayer Rajah,சிங்கப்பூர்
21-மார்-201317:04:30 IST Report Abuse
Kannimozhi Kavitha "எனக்கு எதுவுமே தெரியாது ....என்னை விட்டுடுங்க .... எனக்கு எதுவுமே தெரியாது .... என்னை விட்டுடுங்க .... எனக்கு எதுவுமே தெரியாது .... என்னை விட்டுடுங்க ...." ஆங் ... நான் அதைக் கேட்கல சார் ... எத்தனை கொழந்தைங்க-ன்னு கேட்டேன்"
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
21-மார்-201317:04:25 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி அடப்பாவி இனிமே தான் சிபிஐ க்கு பின் யார் இருகிறார்கள் என்று தெரிந்து கொள்ள போகிறாரா? ஐயா இந்திய மஹா ஜனங்களே.... நம்ம நாடு நல்ல உருபுடுமையா
Rate this:
Share this comment
Cancel
V Balasubramanian - madurai,இந்தியா
21-மார்-201317:03:20 IST Report Abuse
V Balasubramanian சி.பி. ஐ பின்னால் இருப்பது உள்துறை, அதற்குப்பின்னால் இருப்பது தலைமை அமைச்சர். இவ்வளவு டென்சன் காங்கிரசாருக்கு எதற்கு? சி.பி. ஐ அதன் கடமையை செய்து இருக்கும் போது இதுதான் நாட்டின் ஜனநாயக மரபா ? இந்த பாதுகாப்பு வேற ஒரு தனிநபருக்கு கிடைக்குமா ?
Rate this:
Share this comment
Cancel
ramesh - salem  ( Posted via: Dinamalar Windows App )
21-மார்-201317:00:32 IST Report Abuse
ramesh அரசியல் நாடகத்தின் உச்சக்காட்சி
Rate this:
Share this comment
Cancel
Balaji Natarajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201316:57:02 IST Report Abuse
Balaji Natarajan இதில் ஒரு விஷயம் புரியவே மாட்டேங்குது .....பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்று பிரதமர் விசாரிக்க சொல்லியிருக்கார், சிதம்பரம் உடனடியாக பேசி சரி செய்து உள்ளார் , சோனியா நாராயணசாமி யிடம் எப்படி நடந்தது என்று விசாரிக்கிறார் ..... என்னங்க நடக்குது நாட்ல ...... நாம் எல்லாம் மக்கள் என்று நினைத்தார்களா இல்லை மடையர்கள் என்று நினைத்தார்களா.....புரியல .....
Rate this:
Share this comment
Cancel
A.S.VENKATESAN - Chennai,இந்தியா
21-மார்-201316:44:41 IST Report Abuse
A.S.VENKATESAN சிபிஐ -க்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பிரதமருக்கு தெரியவில்லையெனில் இவருக்கு என்னதான் தெரிகிறது? ஏப்போது போகும் இந்த தொல்லை?
Rate this:
Share this comment
Cancel
Kannimozhi Kavitha - Ayer Rajah,சிங்கப்பூர்
21-மார்-201316:34:03 IST Report Abuse
Kannimozhi Kavitha முதல்ல , உங்களுக்குப் பின்னாடி இருந்துக்கிட்டு உங்களுக்குச் சாவி கொடுக்கறது யாருன்னு புரியுதா தாத்தா ...
Rate this:
Share this comment
Cancel
Kannimozhi Kavitha - Ayer Rajah,சிங்கப்பூர்
21-மார்-201316:32:34 IST Report Abuse
Kannimozhi Kavitha அட ... இது எங்க ஆத்தா """" இது என் கையெழுத்து இல்ல ... நான் அவள் இல்ல ..."""" -ன்னு சொன்ன மாதிரியே இருக்குதே .... ஒருத்தர் டயலாகையே எத்தனை பேரு காப்பியடிப்பீங்க ... ஆனா இதுவும் சூபர்ப் டிராமா .... நூத்தி முப்பது கோடி மக்களுக்கு ஒரே சமயத்துல காதுல பூ வைக்கிறது-ன்னா சும்மாவா ..... பார்த்து அப்பு ... உங்களுக்குத் தெரியாமையே .... ஜனாதிபதி கையெழுத்து இல்லாமையே அக்னி - 5 பறந்து போயி சீனா மேல உளுந்துடப் போவுது .... அப்புறம் நம்ம பொளப்பு தேன் கூட்டைக் கலைச்ச மாதிரிதான் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்