இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஜெனீவா: இலங்கைக்கு எதிராக ஐ.நா., மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளும், எதிராக 13 நாடுகளும் ஓட்டுப்போட்டுள்ளன. இந்த ஓட்டெடுப்பில் 8 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இந்த தீர்மானத்தில் ‌ போர்க்குற்ம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என திருத்தம் கொண்டு வர முன்மொழிய வேண்டும் என்ற தி.மு.க., வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது , மனித உரிமை மீறல் குறித்த அமெரிக்க தீர்மானம் தொடர்பாக ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமை கழக மாநாட்டில் விவாதம் நடந்தது.எதிர் தீர்மானம் விவாதம்; ஓட்டுப்பதிவு விவாதம் துவங்கும் முன்னதாக மனித உரிமை தலைவர் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை விளக்கினார். விவாதத்திற்கு பின்னர் ஒட்டெடுப்பு நடந்தது. இது போன்று கடந்த ஆண்டில் இலங்கை எதிர் தீர்மானம் வெற்றி பெற்றது. அது போல் இன்றும் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது .


அமெரிக்க தீர்மானம் விவாதம் துவங்கியதும், அமெரிக்கா தரப்பில் பேசிய அமைச்சர், இலங்கை தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், இந்த விவகாரத்தில் இலங்கையுடன் உதவ தயாராக இருப்பதாகவும், கூறினார்.

பாகிஸ்தான் தரப்பில் பேசிய பிரதிநிதி இந்த தீர்மானம் ஏற்க முடியாது . சர்வேதச பரிந்துரைகள் இதில் இல்லை . இலங்கைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனை நிராகரிக்கிறோம் என்றார்.
மக்களின் சம உரிமை அவசியம்:

இந்திய பிரதிநிதி திலிப் சின்கா பேசுகையில்; இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என இந்தியா விரும்புகிறது. அனைத்து மக்களின் சம உரிமை அவசியம். இங்கு நடந்த சம்பவம் குறித்து நம்பகத்தன்மையுடனான தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். மனித உரிமை ஆணையர் இலங்கையை பார்வையிட வேண்டும். 13 வது சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அண்டை நாடான இலங்கை உறவை முறித்து கொள்ள முடியாது. இருப்பினும் இங்கு நடந்த சம்பவங்கள் குறித்து பொருட்படுத்தாமல் இருக்கவும் முடியாது. அதே நேரத்தில் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது இந்தியாவுக்கு விருப்பமில்லை என்றார்.


இலங்கை கருத்து:


அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது . இது எதிர்மறையான தீர்மானம் இலங்கை மேற்கொண்ட மறுவாழ்வுப்பணிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அமெரிக்க தீர்மானத்தில் உள்ள புகார்கள் தவறானவை. இந்த தீர்மானம் உள்நோக்கம் கொண்டது. மறுவாழ்வு பணிகள் தொடர்கின்றன. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தக்கூடாது. இலங்கைக்கு அதீத எதிர்ப்பு ஏன். என இலங்கை பிரதிநிதி ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் கூறினார்.


தீர்மானத்தை ஆதரித்த 25 நாடுகள்:


இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா,மான்டிநெக்ரா, எஸ்டோனியா, செக் குடியரசு, லிபியா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி,பெரு, போலாந்து, கொரியா, மோல்டிவா குடியரசு, ருமேனியா, செரா லியோன், சுவிட்சர்லாந்து, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கவுதமாலா, ஸ்பெயின், ஐவரி கோஸ்ட்


எதிர்த்த நாடுகள்:பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஈகுவடார், கதார், காங்கோ, மாலத்தீவுகள், உகாண்டா,ஐக்கிய அரசு அமீரகம், தாய்லாந்து, வெனிசுலா, பிலிபைன்ஸ், குவைத், மவுரிடானியா.
தி.மு.க,. கோரிக்கை நிராகரிப்பு ; அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை எதிர் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற தி.மு.க.,வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்தியா தரப்பில் பேசிய சின்கா தி.மு.க., தரப்பு கோரிக்கை எதனையும் முன்மொழியவில்லை. இதனால் தி.மு.க, ஏமாற்றம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய தி.மு.க,. குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. இந்த தீர்மானம் எவ்வித பலனையும் தராது என்றும், தீர்மானத்தை மத்திய அரசு நீர்த்து போக செய்து விட்டது என்று இன்று தி.மு.க,. எம்.பி., திருச்சி சிவா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (94)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pats - Coimbatore,இந்தியா
22-மார்-201319:52:05 IST Report Abuse
Pats தீர்மானம் வெற்றி. மத்திய ஆட்சியிலிருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு (சந்திரசேகர், வி.பி.சிங், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் (1), மன்மோகன் சிங் (2)) திமுக ஒழிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு வெற்றி.
Rate this:
Share this comment
Cancel
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
22-மார்-201318:30:45 IST Report Abuse
அன்வர்-ஹல்வானி போஸ்னியாவிலும், பாலஸ்தீன் லும், என்ன நடந்ததோ அதுதான் இலங்கையிலும் நடந்தது, முட்டாளாகிய அரபு நாடுகள் பாகிஸ்தான் காரன் பேச்சை கேட்டுக்கொண்டு இலங்கை யை ஆதரிக்கிறது,, அப்போ காஷ்மீரில் இந்தியா [சி ஆர் பி எப்] செய்வதை பாகிஸ்தான் அங்கிகரிக்கிரது சூப்பர் அப்பு.. உலகில் மனித நேயமும் அத்துபோய்விட்டது, மனிதர்களும் அத்து போய்விடுவார்கள் போலிருக்கு.. இடத்துக்கு இடம்.. கொள்கையை மாற்றி அமைத்து கொண்டு செல்கிறது உலக நாடுகள்.. மேலும் இந்த அமேரிக்கா கொண்டு வந்த அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்ற கோணத்தில் அரபுக்கள் செய்தார்களோ என்றும் என்ன வேண்டி உள்ளது.. இது போன்ற இனப்படுகொலைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது அமேரிக்கா போன்ற ஓநாய் களுக்கு அவசியமில்லை.. மனித நேயமுள்ள வேறந்த உலக நாடாவது கொண்டு வந்திருக்கலாம்.. ஆனா ஐ நா தான் அமெரிக்க,, அமேரிக்கா தான் ஐநா?
Rate this:
Share this comment
Cancel
ayyappan - covai  ( Posted via: Dinamalar Android App )
22-மார்-201313:36:50 IST Report Abuse
ayyappan ஐயா இந்தி்யா ஒரு மகத்தான தி்ல்லான கிங் ராசிவ்காந்தி் பிரதமரை இந்தி்யா இழந்து விட்டதால் அனைவருக்கும் மிக கவலைதான். இவரை கொன்றதாக கூறப்படும் அம்பையும் அழித்து விட்டீர்கள். ஆனால் எய்தவனை மட்டும் ஒன்னும் பண்ணல. இத சாக்கா வைத்து ஒரு உயிருக்காக அப்பாவி பல லட்சம் தமிழ் உயிர்களை பழி வாங்குவதற்கு எவண்டா சட்டம் போட்டது
Rate this:
Share this comment
Cancel
Kesavan Karthik - Tiruvannamalai,இந்தியா
22-மார்-201313:29:19 IST Report Abuse
Kesavan Karthik காங்கிரஸ் ஒழிக
Rate this:
Share this comment
Cancel
ayyappan - covai  ( Posted via: Dinamalar Android App )
22-மார்-201313:17:22 IST Report Abuse
ayyappan போங்கடா போங்க நீங்கலும் ஒங்க கட்சியூம் காங்கிரசு கருகிய கமிட்டி கூட்டமும்
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
22-மார்-201311:40:53 IST Report Abuse
Rajasekaran Palaniswamy தமிழக மக்களிடம் உள்ள ஒரே ஆயுதம் ஓட்டுதான். வரும் தேர்தலில் தமிழின துரோகிகளும், காங்கிரஸ்ம் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடுவார்கள்.
Rate this:
Share this comment
Silambarasan - Thiruvannamalai,இந்தியா
25-மார்-201311:23:36 IST Report Abuse
Silambarasanகாங்கிரஸ் , மட்டும் இல்லை திராவிடர்களையும் சேர்த்து....
Rate this:
Share this comment
Cancel
Silambarasan - Thiruvannamalai,இந்தியா
22-மார்-201310:26:15 IST Report Abuse
Silambarasan இலங்கையோடு பகையை விரும்பவில்லை இந்தியா.... பிறகு எந்த ம..க்கு தினமும் தமிழக மீனவர்களை சிங்களன் சுட்டுகிட்டு இருக்கான்.... தமிழன் இந்தியன் இல்லையா? ஓ... இந்திய - இலங்கை நட்பு. அப்போ தமிழ்,தமிழ் நாடு,தமிழன் தான் எல்லாரும் எதிரிகள....?
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
22-மார்-201309:58:53 IST Report Abuse
sitaramenv வழக்கம் போல் மஞ்சள் துண்டு பிரதமருக்கு கடிதம் எழுதுவது போல் ஒரு தீர்மானம் ...அவ்வளவுதான். ராஜபக்சேயை தண்டிக்க என்ன உருப்படியான நடவடிக்கை என்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Kperiyasamy Kalimuthu - Sivagangai(karaikudi),இந்தியா
22-மார்-201309:41:49 IST Report Abuse
Kperiyasamy Kalimuthu இப்பொது நீலிக்கண்ணீர் வடிக்கும் jj ராஜீவை கொல்ல யார் காரணம் விடுதலைப்புலி மட்டுமா? சந்திரா சாமி சு சாமி போன்ற அரசியல் தரகர்களுமா? இன்றுவரை முறையான விசாரணை தெரியவில்லை. தமிழனை கொன்று குவித்தவனை சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுக்கும் குள்ளநரித்தனத்தை வெறும் தேர்தலுக்காக மட்டுமே நடத்தப்படும் நாடகமாக பார்க்கிறேன். பொதுவுடைமை கொள்கையில் தோற்றுப்போனது காங்கிரசு முரண்பாடுகள் ஊழல் ஒன்றை மறைக்க மற்றொரு தவறு என நீளும் பட்டியல் இந்தியாவில் இப்படி இருக்க இலங்கை மக்களைப்பற்றி எப்படி வரும் கவலை. அவர்களின் வாழ்வாதரங்களை மீட்டெடுக்க ஒரு நாதி இல்லை. இது ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் நாடகம் என்பதை தவிர்த்து வேறு நன்மை இருப்பதாக தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
கார்த்திகேயன் - Coimbatore,இந்தியா
22-மார்-201309:27:07 IST Report Abuse
கார்த்திகேயன் டேய் காங்கிரஸ் காரங்களா எங்க பகுதிக்கு ஓட்டு போடுங்கனு வந்த நாஸ்திதாண்டா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்