Advertisement
பேனி விஷயத்தில் அடக்கி வாசிக்க முலாயம் திடீர் முடிவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2013,19:54 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 21,2013,23:43 IST

புதுடில்லி: மத்திய உருக்குத் துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மாவின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், சற்றே அடக்கி வாசிக்க, சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும், மத்திய உருக்குத்துறை அமைச்சருமான பேனி பிரசாத் வர்மா, உ.பி.,யில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கிற்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது' என, விமர்சித்திருந்தார். இதற்கு, சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. "பேனி பிரசாத் வர்மா மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்' என, சமாஜ்வாதி கூறியபோது, காங்கிரஸ் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஐ.மு., கூட்டணியில் இருந்து, தி.மு.க., விலகியதும், அரசை காப்பாற்ற, சமாஜ்வாதி மீது காங்கிரசுக்கு அதிக பாசம் வந்து விட்டது. நேற்று ஒரே நாளில் காட்சிகள் மாறின. லோக்சபாவில், முலாயம் சிங்கை நேரில் சந்தித்து சோனியா மன்னிப்பு கேட்டார். பேனி பிரசாத் வர்மா, பிரதமரை சந்தித்து பேசிய பின், முலாயம் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டார்.


இருப்பினும், "பேனி பிரசாத் வர்மாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்' என, சமாஜ்வாதி கட்சியினர் வலியுறுத்தினர். அவருக்கு எதிராக, உ.பி.,யில் போராட்டம் நடத்தினர்.


கண்டனம்: இந்நிலையில், சமாஜ்வாதி பார்லிமென்ட்ரி கட்சி கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில், பல எம்.பி.,க்கள் பேனி பிரசாத் வர்மாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் பேசிய, முலாயம், "சோனியாவும், பிரதமரும் தனிப்பட்ட முறையில் நேரிடையாக தலையிட்டுள்ளனர். எனவே, இந்த விஷயத்தில் பொறுமை காப்போம்' என, குறிப்பிட்டதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய முலாயம் சிங் யாதவ் கூறியதாவது: பார்லிமென்டில் மானிய கோரிக்கைகள் மசோதா, குற்றவியல் சட்ட திருத்த மசோதா ஆகியவை நிறைவேறுவதற்கு, தடையாக இருக்க கூடாது என, முடிவு செய்துள்ளோம். எவ்வித முடிவும் எடுத்துக்கொள்ள, எம்.பி.,க்கள் எனக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர். பல்வேறு விஷயங்களில், அதற்கான நேரம் வரும்போது முடிவு எடுப்பேன். இவ்வாறு, முலாயம் கூறினார். இதற்கிடையில், உ.பி., மாநிலம் கான்பூரில், சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திவைத்தும், பேனி பிரசாத் வர்மாவின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தினர்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
PR Makudeswaran - madras,இந்தியா
23-மார்-201308:28:43 IST Report Abuse
PR Makudeswaran முலாயம் சிங் மேல் சி பி ஐ கண் வைக்கிறது என்று அகிலேஷ் யாதவ் சொல்கிறார்..ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை இருக்கவே இருக்காது.சும்மா மிரட்ட மட்டும்தான். இவர் குடுமி அவரிடம்:அவர் குடுமி இவரிடம்.எல்லோரும் கூட்டு களவாணிகள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.