புதுடில்லி: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், சர்வதேச அழுத்தத்திற்கு இந்தியா உடன்பட்டு விட்டதாக, அந்நாடு அதிருப்தி தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம், ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கை ஏற்காது. இவ்விவகாரத்தில் இந்தியா சர்வதேச அழுத்தத்திற்கு உடன்பட்டு விட்டது. தீர்மானத்திற்கு ஆதரவான இந்தியாவின் ஓட்டு, நீண்ட நெடுநாளைய இந்திய இலங்கை உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எதிர்காலம் என்பது மனித உரிமைகள் விவகாரத்தை விட முக்கியமானது. அதை நோக்கி இலங்கை பயணிக்கும். சர்வதேச அழுத்தத்திற்கு இலங்கை உடன்படாது என்று தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.