திருநெல்வேலி: விருதுநகர் , ஏழாயிரம்பண்ணை, ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த தர்மராஜ் மகன் மணிகண்ணன் 46.கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சியில் குடியிருந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதே பகுதியைச்சேர்ந்த பாலகங்காதரனும் ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். இருவரும் சேர்ந்து நிலம் வாங்கியதில் பணபரிவர்த்தனை இருந்தது. இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு பாலகங்காதரன், இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினர், மணிகண்ணனிடம் , பாலகங்காதரனுக்கு தரவேண்டிய தொகையை கேட்டனர். . இதனால் முன்விரோதம் இருந்துள்ளது. காலை , நிலம் விற்பனை தொடர்பாக மணிகண்ணன், தனது பைக்கில் கோவில்பட்டியை சேர்ந்த போட்டோகிராபர் மாரிமுத்துவை உடன் அழைத்து. புளியங்குளம் விலக்கில் பைக்கில் சென்ற போது கார் பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல்சென்றது. மணிகண்ணன், மாரிமுத்து ஆகியோர் காயமடைந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் மணிகண்ணன் இறந்தார். மாரிமுத்து, மேல்சிகிச்சைக்காக நெல்லை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.