பாட்னா: ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடந்தது குறித்து மத்திய அரசு மீது குற்றம் சுமத்த தேவையில்லை என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பாட்னாவில் நிருபர்களிடம் பேசிய அவர், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடந்தது குறித்து பிரதமர் அறிந்திருக்கவில்லை. அப்படியிருக்கும் போது, மத்திய அரசு மீது குற்றம் சுமத்த வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகித்து வரும் நிலையில், சமீப காலமாக அவர் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.