Advertisement
ரயில் இன்ஜின், பெட்டிகளின் மீது ஏறுவது ஆபத்து: போராட்டகாரர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2013,22:19 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 22,2013,11:48 IST

"ரயில் மறியல் போராட்டத்தின் போது, ரயில் கூரை மீதும், ரயில் இன்ஜின் மீதும் ஏறி உயிரை இழக்காதீர்கள்" என, ரயில்வே நிர்வாகம் மூலம், போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சமீபகாலமாக, பல்வேறு போராட்டங்களின் போது, மின் மயமாக்கப்பட்ட ரயில் தடங்களில், இயக்கப்படும் ரயில்களின் இன்ஜின்கள் மற்றும் கூரையின் மீது போராட்டக்காரர்கள் ஏற முயற்சிக்கின்றனர். மின்மயமாக்கப்பட்ட ரயில் தடங்கள், 25 ஆயிரம் வோல்ட் மின்சக்தி கொண்டதாக இருப்பதால், இந்த மின் தடங்களின் அருகில், 2 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களுக்கு கடும் மின் அதிர்ச்சி ஏற்படும்.

மின்சார ரயில் இன்ஜின்களின், மேற்பகுதிகள்,25 ஆயிரம் வோல்ட் மின் சக்தியில் இயங்குவதால், ரயில் இன்ஜின் கூரை மீது ஏறு முயற்சிப்பவர்கள் மீது, மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது.இப்பாதையில், ஒரு குறிப்பிட்ட மின் கம்பியில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தாலும், அருகில் உள்ள மின்சார கம்பி அருகில் வருபவர்கள், மின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட வாய்புள்ளது.பொதுமக்கள், தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயில் மறியல் போராட்டங்களின் போது, ரயில் இன்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் கூரை மீது ஏறுவதையும், மின் கம்பிகளுக்கு அருகில் செல்வதையும், தவிர்க்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.-நமது நிருபர்-




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
S.Dinakaran - Thanjavur,இந்தியா
22-மார்-201318:46:48 IST Report Abuse
S.Dinakaran விடுங்க சார், போராட்டத்துக்காக உயிரை கொடுக்க துடிக்கும் வீரர்களை தடுக்காதீர்கள். கரண்ட் ஷாக் அடித்து நாலு பேர் கருகி செத்தால், அடுத்து எவனும் இஞ்சின் பக்கமே வரமாட்டான். சுடும் என்று சொன்னால் மண்டையில் ஏறாது, கையை விட்டு சுட்டுக்கொண்டால் தன்னாலே உறைக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
22-மார்-201306:02:46 IST Report Abuse
K.Sugavanam இதையெல்லாம் எங்கே கேக்க போறாங்க..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.