Advertisement
அரசின் நிதிநிலை அறிக்கை காகித அறிவிப்புகள்: ஸ்டாலின்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

21 மார்
2013
23:50
பதிவு செய்த நாள்
மார் 21,2013 22:38

சென்னை:""அரசின் நிதிநிலை அறிக்கை என்பது காலவரையறை குறிப்பிடாத வெறும் காகித அறிவிப்புகளாகவே இருக்கிறது,'' என, ஸ்டாலின் கூறினார்.சட்டசபையில், நிதி அமைச்சர், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து கொண்டிருந்தார். அப்போது, தி.மு.க., சட்டசபை தலைவர் ஸ்டாலின், எழுந்து நின்று, கையில் வைத்திருந்த காகிதத்தில் இருந்த வாசகங்களை படிக்க முயன்றார்.ஆனால், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மேஜை மீது கையால் தட்டி சப்தம் எழுப்பியதால், அவர் பேசியது கேட்கவில்லை.
அதன்பின், ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து வெளியே வந்தனர். நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக அறிவித்த ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த ஜனவரி மாதம், முதல்வர் பெயரால், 25க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் செய்யப்பட்டன. கடந்த, 14ம் தேதி, பூம்புகாரில், 78 கோடி ரூபாயில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார்.
கடந்த, 18ம் தேதி, 12 கோடியே 36 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில், 99,329 மிக்சிகள் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த நிதிநிலை அறிக்கை சடங்குக்காக நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்படுகின்ற ஒன்றாகவே இருக்கிறது.அரசின் நிதிநிலை அறிக்கை என்பது காலவரையறை குறிப்பிடாத வெறும் காகித அறிவிப்புகளாகவே இருக்கிறது. எனவே அவை கதைக்கு உதவாது, காரியத்திற்கு ஆகாது. இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.