சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய கதிரவன் வெட்டிக்கொலை: எட்டு பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய கதிரவன் வெட்டிக்கொலை: எட்டு பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

Updated : மார் 22, 2013 | Added : மார் 21, 2013
Advertisement
சங்கரராமன் கொலை வழக்கில்  தொடர்புடைய கதிரவன் வெட்டிக்கொலை: எட்டு பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

சென்னை:சங்கராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவன், எட்டு பேர் கொண்ட கும்பலால் சென்னையில் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் வரதாஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர், 2004 செப்டம்பர் 3ம் தேதி, கோவில் வளாகத்திலேயே வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக ஜெயந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கூலிப்படையாக செயல்பட்ட, அப்பு என்கிற கிருஷ்ணசாமி, கதிரவன், மாட்டு பாஸ்கர், சின்னா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ரவி சுப்ரமணியன், அப்ரூவராக மாறிவிட்டார். புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெறும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தற்போது ஜாமினில் உள்ளனர். சின்னா என்கிற சென்ன கேசவலு, கடந்த ஒரு ஆண்டுக்கு முன், பூந்தமல்லியில் நீதிமன்றம் முன், வெட்டி கொலை செய்யப்பட்டார்.சங்கரராமன் கொலை வழக்கில், நான்காவது குற்றவாளியான கதிரவனுக்கு,42, இன்னும் திருமணமாகவில்லை. இவர் சென்ø கே.கே. நகரில் உள்ள தன் அண்ணன் அலங்கார் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 7:30 மணிக்கு திருப்பதி செல்வதற்காக தன் காரில் டிரைவருடன் புறப்பட்டார்.
வீட்டை விட்டு, கார் சிறிது தூரம் சென்றதும், இரண்டு காரில் வந்த மர்ம நபர்கள் எட்டு பேர், கதிரவனின் காரை சுற்றிவளைத்தனர். கார் கண்ணாடியை அரிவாளால் உடைத்து, கதிரவனை வெளியே இழுத்துப்போட்டனர். கதிரவன், தப்பி ஓடினார். ஆனால், மர்ம கும்பல் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன், அவரை சுற்றி வளைத்து, சரமாரியாக வெட்டியது. அந்த வழியாக சென்றவர்கள், இந்த சம்பவத்தை பார்த்தவுடன், அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். சிலர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
மர்ம கும்பல் அங்கிருந்து சென்றதும், 108 ஆம்புலன்சுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கதிரவன் கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வாலிபால் வீரர்:கொலை செய்யப்பட்ட கதிவரன், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த தோட்டம் மாணிக்கத்தின் மகன். அப்பு, ரவுடி ஆற்காடு சுரேஷ் போன்ற, கெட்ட நண்பர்களின் சகவாசத்தால், கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனத்தில் ஈடுபட்டு பல முறை சிறைக்கு சென்று வந்த இவர், சிறந்த வாலிபால் வீரர். சிறையில் இருந்தபோது, சக கைதிகளுக்கு வாலிபால் பயிற்றுநராக இருந்துள்ளார். சங்கரராமன் கொலை வழக்கு, ஆரம்பகால நண்பர், ரவுடி சின்னாவை பூந்தமல்லியில் கொன்ற வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை கொல்ல முயன்ற வழக்குகள் இவர் மீதுள்ள வழக்குகளில் குறிப்பிடத்தக்கவை.
கடந்த சில மாதங்களாக காஞ்சிபுரம், வேலூர் என, வெளிமாவட்டங்களில் தங்கியிருந்து, அவ்வபோது சென்னை வந்து கட்டப்பஞ்சாயத்து நடத்திவிட்டு, செல்வார். இதேபோல், கடந்த ஆறு மாதத்துக்கு முன், பூந்தமல்லியில் ஒரு நிலம் தொடர்பாக பஞ்சாயத்து செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட எதிர் தரப்பினர், கூலிப்படையை ஏவி, கொலை செய்திருக்கலாம், அல்லது சின்னாவின் கொலைக்கு பழிக்கு பழியாக அவரது நண்பர்கள் கொலை செய்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புளியந்தோப்பை சேர்ந்த யமஹா ராஜேஷ், ஒல்லி ராஜேஷ், சரவணன், மாதவன், அமீர் ஆகிய ஐந்து பேர், திருவொற்றியூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில், நேற்று பிற்பகல் 4:00 மணிக்கு சரண் அடைந்தனர். அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகே, கொலைக்கான காரணம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை