Advertisement
அரவிந்தர் ஆசிரமம் மீது கல்வீசி தாக்குதல்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மார்
2013
23:30

புதுச்சேரி : இலங்கை விவகாரம் தொடர்பாக, புதுச்சேரியில் நேற்று நடந்த, கடையடைப்புப் போராட்டத்தின் போது, அரவிந்தர் ஆசிரமம் மீது, கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில், மாணவர் கூட்டமைப்பு மற்றும் வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கடையடைப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் ஈடுபட்ட, 10க்கும் மேற்பட்டவர்கள், புதுச்சேரி மரைன் வீதியிலுள்ள, அரவிந்தர் ஆசிரமத்திற்குள், நேற்று காலை, 11:30 மணியளவில், திடீரென நுழைந்து, கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், மாநில தலைவர் வீரமோகன் தலைமையில், ஆசிரமத்தின் நுழைவாயிலில் வைத்திருந்த பூந்தொட்டிகளை உடைத்து, சேதப்படுத்தி ஓடினர். சம்பவம் தொடர்பாக, பெரியகடை போலீசார், அரவிந்தர் ஆசிரமத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.