"நாட்டில், 6.8 கோடி பேர் குடிசைகளில் வசிக்கின்றனர்' என, அரசு சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடு ஒன்றில் தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் சந்திரமவுலி கூறியதாவது: குடிசைகளில் வசிக்கும், 6.8 கோடி பேரில், பெரும்பாலானவர்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் வசிக்கின்றனர். இவர்கள் எல்லாம், 1.37 கோடி குடிசை வீடுகளில் வசிக்கின்றனர்.
குடிசைகளில் வசிப்போரில், 25 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், நகரங்களில் வசிக்கின்றனர். 19 நகரங்களில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குடிசைகளில் வாழ்கின்றனர். குடிசைகளில் வாழ்வோரில், 90 சதவீதம் பேர் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். 70 சதவீதம் பேர், "டிவி'யும், 72 சதவீதம் பேர் தொலைபேசி வசதியும், 10 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் வசதியையும் கொண்டுள்ளனர். இவ்வாறு, சந்திரமவுலி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.