ஐதராபாத்: தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, ஐதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தெலுங்கானா ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். மத்தியில், ஐ.மு., கூட்டணி அரசு ஆட்டம் கண்டுள்ள நிலையில், ஆந்திராவில், மீண்டும், தெலுங்கானா விவகாரத்தை, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் பா.ஜ., கட்சியினர் மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.
நேற்று சாலை மறியல் போராட்டத்திற்கு, இக்கட்சிகள் அழைப்பு விடுத்து இருந்தன. இதற்கு போலீசார் அனுமதி மறுத்த போதும், தடையை மீறி, பல தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மகபூப் நகர் மற்றும் ராயலசீமா மாவட்டங்களில், நெடுஞ்சாலைகளில், போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி, போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஐதராபாத் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின், போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை போலீசார் கைது செய்தனர். போக்குவரத்து சரியான பின் தான், கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர். பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்றுள்ள, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கைது நடவடிக்கையை கண்டித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.