மும்பை : "சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கேட்டதும், என் நெஞ்சே வெடித்து விட்டது; அவல நிலையை எண்ணி வருந்தினேன்' என, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் குறிப்பிட்டார். மும்பையில், 20 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட, தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில், ஆயுதம் வைத்திருந்த வழக்கில், நடிகர், சஞ்சய் தத்துக்கு, மூன்றாண்டுகளுக்கு மேல், சிறை தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் எனவும், நான்கு வாரங்களுக்குள் சிறையில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தொடர்பாக, நடிகர் சஞ்சய் தத், பத்திரிகைகளுக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: நான் ஏற்கனவே, 20 ஆண்டுகள் பாதிக்கப்பட்டு உள்ளேன். 18 மாதங்கள் சிறையில் தண்டனை அனுபவித்து உள்ளேன். என்னை துன்புறுத்தி பார்க்க சிலர் விரும்பினால், அது என்னை மேலும் வலுப்படுத்தும். தீர்ப்பை கேட்டதும் என், நெஞ்சு வெடித்து விட்டது. என்னுடன் சேர்ந்து, என் மனைவியும், மூன்று குழந்தைகளும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். நான் நீதித் துறையின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். என் கண்களில் நீர் உள்ளவரை, அது தொடரும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார். இந்த தீர்ப்பால், பாலிவுட் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. சஞ்சய் தத் சிறை தண்டனையை அனுபவித்தால், அவர் நடித்துவரும் படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும். அந்த வகையில், 250 கோடி ரூபாய் முடங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
குண்டு வெடித்த போது எத்தனை பேரின் நெஞ்சு வெடித்தது? குற்றத்தை உணர்பவன் தண்டனைக்கு அஞ்ச மாட்டான், மாறாக தான் செய்த தவறுக்கு வருந்துவான். கொலைகாரர்கள் எத்தனையோ பேர் தவறுக்கு வருந்துகிறார்கள். அதனால் அவர்களுக்கு தண்டனை கிடையாது என்று சொல்கிறதா நீதி மன்றம்? குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகள் எவ்வளவு வேதனை அனுபவித்தார்களோ, இன்னும் அனுபவிக்க போகிறார்களோ? இவருக்கு ஒரு விளம்பர பிரியரான முன்னாள் நீதிபதி வேறு வக்காலத்து. இவரின் பெற்றோர் நல்லவர்களாம். அதனால் இவரை விட்டு விட வேண்டுமாம். அவர் நீதிபதியாக இருந்த போது குற்றம் சாட்டப் பட்டவரின் அப்பன், பாட்டன் எல்லோருடைய நன்னடத்தை செர்டிபிகேட்டை பார்த்து விட்டு தான் தீர்ப்பு சொன்னார் போல.
257 பேர் உயிரிழக்கவும், 713 பேர் காயமடையவும் காரணமாகயிருந்த 12 மார்ச் 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏதோவொரு வகையில் சம்பந்தப்பட்டு, ஒன்றரை வருடம் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்த ஜனாப் சஞ்சய் தத்துக்கே இருதயம் வெடிக்குமானால், அவ்விபத்தில் தங்களது உற்றோரை இழந்தவர்களின் மார்புகள் என்னவாயிருக்கும். சஞ்சய் தத்துக்கு மட்டும்தான் மனைவியும், குழந்தைகளும் உள்ளனரா? ஏன், விபத்தால் பாதிக்கப்பட்டோரெல்லாம் குடும்பமே இல்லாத அனாதைகளா. "பாலிவுட் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. சஞ்சய் தத் சிறை தண்டனையை அனுபவித்தால், அவர் நடித்துவரும் படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும். அந்த வகையில், 250 கோடி ரூபாய் முடங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்பதெல்லாம் மனிதாபமுள்ள பேச்சுத்தானா. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.