Advertisement
சூரியநெல்லி மாணவி பலாத்கார வழக்கு : 31 பேருக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2013,23:33 IST

கொச்சி : சூரியநெல்லி கிராம மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், 31 பேருக்கு, கேரள ஐகோர்ட் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. கடந்த, 1996ல், கேரளா, இடுக்கி மாவட்டம், சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த, அப்போது, ஒன்பதாம் வகுப்பு படித்த, 16 வயது மாணவியை, சிலர் கடத்திச் சென்று, 40 நாட்கள் பல்வேறு இடங்களில், பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கில், 35 பேருக்கு, கோட்டயம் சிறப்பு கோர்ட் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த, கேரள ஐகோர்ட், ஒருவரை மட்டும் குற்றவாளி என, அறிவித்ததோடு, மற்ற, 34 பேரை விடுவித்தது. இதையடுத்து, மாணவி சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட், கேரள ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்ததோடு, வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் சிறப்பு கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்டவர்களில், 31 பேர், ஜாமின் கோரி, கேரள ஐகோர்ட்டில் மனுச் செய்தனர். அவர்களின் மனுக்களை, கேரள ஐகோர்ட் நீதிபதிகள் கே.டி.சங்கரன் மற்றும் எம்.எல். ஜோசப் பிரான்சிஸ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. "31 பேரும், கேரளாவை விட்டு வெளியேறக்கூடாது; பாஸ்போர்ட்களை ஒப்படைக்கவேண்டும்; மாணவியையோ, அவரது குடும்பத்தையோ துன்புறுத்தக் கூடாது' என்ற நிபந்தனைகளுடன் நேற்று ஜாமின் வழங்கினர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் - திருச்சிராபள்ளி,இந்தியா
22-மார்-201306:15:25 IST Report Abuse
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் குரியனுக்கு என்ன வழங்கினாங்க......?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.