சென்னை:மத்திய அரசின் தவறான பொருளாதார மேலாண்மை, டீசலுக்கான இரட்டை விலை கொள்கை மற்றும் மத்திய புதிய நிதி மசோதா ஆகியவற்றுக்கு, தமிழக பட்ஜெட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளதாவது:பொருளாதார மேலாண்மையிலும், நிதிநிலை சீரமைப்பிலும் மத்திய அரசு மேற்கொள்ளும், திறமையான நடவடிக்கைகளே, நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்யும். ஆனால், நலிந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும், உறுதியான நடவடிக்கைகள், மத்திய அரசின் பட்ஜெட்டில் இல்லை.
இந்நிலையில், பொருளாதார வளர்ச்சி குன்றியும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை குன்றியும், கடுமையான பொருளாதார சூழல் நிலவும் நிலையில், தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிற்போக்கான, இரட்டை டீசல் விலை கொள்கையாலும், அடிக்கடி உயரும் டீசல் விலையாலும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது.இதை மக்கள் மீது சுமத்தாமல், அரசே ஏற்றுக் கொள்ள, 2012-13ம் ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 2013-14ம் ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டியுள்ளது.மேலும், மாநில அரசின் வரி மற்றும் வரியல்லாத வருவாயைத் தடுக்கும் வகையில், நிதி மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதன்மூலம், மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களிடம் பெறக் கூடிய, சட்டபூர்வமான கட்டணங்களுக்கு, மத்திய அரசு தடை விதிக்கிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணாக உள்ள இம்மசோதாவை, மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, மத்திய அரசுக்கு, தமிழக பட்ஜெட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.