பந்தல் அமைக்க சிவாஜி மகன் ரூ.20 லட்சம் கொடுத்தார் : சினிமா ஆர்ட் டைரக்டர் சாட்சியம்| Dinamalar

பந்தல் அமைக்க சிவாஜி மகன் ரூ.20 லட்சம் கொடுத்தார் : சினிமா ஆர்ட் டைரக்டர் சாட்சியம்

Added : மார் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெங்களூரு: ""சுதாகரன் திருமணத்துக்கு வரவேற்பு வளைவு, பந்தல் அமைக்க, நடிகர் சிவாஜி மகன் ராம்குமார், 20 லட்சம் ரூபாய் கொடுத்தார்,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், சினிமா ஆர்ட் டைரக்டர், கோபிகாந்த் சாட்சியம் அளித்தார்.

பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், மற்றும் இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கில், நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில், வேலூர் பாண்டுரங்கன், சென்னை ராயப்பேட்டை முத்துமணி, கோவை கே.பி. ராஜூ, ஆகியோர் சாட்சி அளித்தனர்.
சாட்சியம்: கடந்த, 1995 செப்டம்பர், 7ம் தேதி நடந்த சுதாகரன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, வரவேற்பு அளிக்க, கட்சி நிர்வாகிகள், 12 பேரிடம், தலா ஐந்து லட்சம் ரூபாய் வசூலித்து, சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி உதவியாளர் ரமேஷிடம், 60 லட்சம் ரூபாய் கொடுத்தோம். இதையடுத்து, சென்னை வளசரவாக்கம் சினிமா ஆர்ட் டைரக்டர் கோபிகாந்த், ""சுதாகரன் திருமண மாப்பிள்ளை அழைப்புக்காக, திருமண மண்டபம் எதிரில் பந்தல், ஆர்ச், வரவேற்பு செட் அமைக்கும்படி, நடிகர் சிவாஜி கணேசன் மகன்கள் ராம்குமார், பிரபு கேட்டுக் கொண்டனர். இதற்காக, ராம் குமார், 20 லட்சம் ரூபாய் கொடுத்தார்,'' என்றார்.
குறுக்கு விசாரணை செய்த அரசு வக்கீல் பவானிசிங், ""நீங்கள் பணம் வசூல் செய்ததாக கூறுவது பொய்,'' என்றார். பின்னர், இவர்களிடம், ஜெயலலிதா வக்கீல் குமார், சசிகலா வக்கீல் மணி சங்கர், சுதாகரன் வக்கீல் பரணி குமார் ஆகியோர் சாட்சிகளிடம் விசாரணை செய்தனர்.
திருவாருர் சாமிநாதன், மதுரை வாடிப்பட்டி ராஜேந்திரன், மதுரை தமிழ் செல்வன், தேனி சுதாகரன், திண்டுக்கல் முருகேசன், நெல்லை முத்துராஜ், துத்துக்குடி அருணாசலம், சிவகங்கை வைரமணி, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, ஆகியோர் சாட்சியமளித்தனர்.
"நாங்கள் தினமும் தினமலர், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ்களை படிப்பது வழக்கம். தினமலர் நாளிதழை கடையில் சென்று வாங்கி வருவோம். நமது எம்.ஜி.ஆர்., பத்திரிகைக்கு, 18 ஆயிரம் ரூபாய், 15 ஆயிரம் ரூபாய், 12 ஆயிரம் ரூபாய் ஆயுள் சந்தா கட்டியுள்ளோம். நாளிதழ் வீட்டுக்கே வருகிறது. டிபாசிட்டை திரும்ப வாங்கவில்லை' என, அவர்கள் கூறினர்.
இன்றும் விசாரணை தொடர்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை