புதுடில்லி: மூன்றாம் நபர் காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை உயர்த்தப்பட்டது, டீசல் விலையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தது, டயர்கள் இறக்குமதிக்கு வரி விதித்தது போன்றவற்றை கண்டித்து, ஏப்., 1ம் தேதி முதல், லாரி மற்றும் பஸ் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் துணைத் தலைவர், குல்தரண் சிங் அத்வால் கூறியதாவது: டயர் இறக்குமதிக்கு வரி உட்பட, பல விதமான பிரச்னைகளால், சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களை இயக்குவோர், கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். எங்களின் பிரச்னைகளை எல்லாம், வரும், 30ம் தேதிக்குள் தீர்க்க, மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், ஏப்., 1ம் தேதி நள்ளிரவு முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, குல்தரண் சிங் அத்வால் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.