இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் "தேரீக்-இ-இன்சாப்' தலைவராக, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான், கடந்த, 1996ல், "தேரீக்-இ-இன்சாப்' துவங்கினார். இது வரை நடந்த தேர்தல்களில், பெரும் தோல்வியை சந்தித்த இக்கட்சி, கடந்த, 2011ம் ஆண்டு, லாகூரில் நடந்த பேரணியில், லட்சக்கணக்கான மக்களை திரட்டி, தன் பலத்தை நிரூபித்தது. வரும், மே, 11ம் தேதி நடக்கவுள்ள பொது தேர்தலில், 1,000 வேட்பாளர்களை களம் இறக்க, இக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் உட்கட்சி தேர்தல்,நேற்று முன்தினம் நடந்தது. இதில், கட்சியின் நிறுவனரான இம்ரான்கான், மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ""கட்சியின் தலைவர் பதவியில், இருமுறைக்கு மேல் போட்டியிட யாருக்கும் அனுமதி இல்லை என்பதால், ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சி இருக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, '' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.