E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
முஷாரப்பை கைது செய்ய "இன்டர்போல்' மறுப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மார்
2013
23:44

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் மாஜி அதிபர் பெர்வேஸ் முஷாரபை கைது செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கையை, சர்வதேச போலீஸ் நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் அதிபராக இருந்த பெர்வேஸ் முஷாரப், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலும், தலைமை நீதிபதியை சிறையில் அடைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள், இவர் மீது உள்ளன.
இதனால், கடந்த, 2009ம் ஆண்டு, நாட்டை விட்டு வெளியேறி, துபாய் மற்றும் லண்டனில் தங்கியுள்ளார். இதற்கிடையே, வரும், 24ம் தேதி, பாகிஸ்தான் திரும்ப திட்டமிட்டுள்ளார்.
"பாகிஸ்தான் முஸ்லீம் லீக்' கட்சியின் சார்பில், மே, 11ம் தேதி நடக்க உள்ள, பொது தேர்தலில் போட்டியிடவும், அவர் திட்டமிட்டுள்ளார். பாகிஸ்தானில் நடந்த வழக்கு விசாரணைகளில் பல முறை வாரன்ட் பிறப்பித்தும் அவர் ஆஜராகாததால், அவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் உதவியை பாகிஸ்தான் நாடியது. "பாகிஸ்தானின் இக்கோரிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது' என, குறிப்பிட்டுள்ள இன்டர்போல், அவரை கைது செய்யும் நடவடிக்கையான, "ரெட் கார்னர் நோட்டீஸ்' வழங்க மறுத்துள்ளது. கடந்த ஆண்டும், இதே கோரிக்கையை, இன்டர்போல் நிராகரித்தது, குறிப்பிடத்தக்கது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.