இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் நடக்கவிருந்த மோதலை, மதத்தலைவர்கள், தலையிட்டு தடுத்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷிகார்புர் என்ற நகரில், இந்துக்கள் அதிகமாக வசிக்கின்றனர். குறைந்த எண்ணிக்கையில் சீக்கியர்களும், இங்கு வசிக்கின்றனர். இந்நகரில் உள்ள ஜெய் சமதா ஆசிரமம், இந்து மற்றும் சீக்கிய மக்கள், வழிபடும் இடம் ஆகும். இங்கு நடந்த விழா தொடர்பான புகைப்படங்களை, சீக்கிய இளைஞர்கள் சிலர், பேஸ்புக் இணையதளத்தில் வெளியிட்டதை அடுத்து, இரு பிரிவினரிடையே, மோதல் உருவாகும் சூழல் உண்டானது. இதையறிந்த, இரு மதங்களின் தலைவர்களும், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இரு தரப்பினரையும், அவர்கள் சமாதானம் செய்ததால், நடக்கவிருந்த மோதல் தடுக்கப்பட்டது. "இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல, ஆயுதங்களுடன் கூடி இருந்தனர். நாங்கள் சரியான நேரத்தில் சென்றதால், விபரீதம் தடுக்கப்பட்டது' என, மதத் தலைவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.