ஜெனிவா: இலங்கைக்கு எதிராக, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஓட்டளித்துள்ளன.
இலங்கையில், 2009ல், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, இறுதி கட்ட சண்டை நடந்தது. இதில், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். ஏராளமான விடுதலைப் புலிகள், ராணுவத்திடம் சரணடைந்தனர். சரணடைந்த விடுதலை புலிகள், ரகசியமான இடங்களில் வைக்கப்பட்டு, ராணுவத்தினரால், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் விடுதலை புலிகள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகவும், மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கான, மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும், நல்லிணக்க ஆணைக்குழு, சில பரிந்துரைகளை செய்திருந்தது. இந்த குழு பரிந்துரைகள் மீது, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக கூறி, கடந்த ஆண்டு, ஜெனிவாவில் உள்ள, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் தொடர்பாக, இலங்கை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால், இந்த ஆண்டும், மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்காவால்,தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சுவிட்சர்லாந்தின், ஜெனிவாவில், மனித உரிமை ஆணையத்தின், 22வது ஆண்டு கூட்டம் தற்போது நடக்கிறது. "இலங்கையில், நடந்த சண்டையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இது குறித்து சுதந்திரமான, நம்பத் தகுந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என கூறி, மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா, கடந்த வாரம் தீர்மானம் தாக்கல் செய்தது.
இந்த தீர்மானத்தை, வன்மையாக கண்டித்த, இலங்கை பிரதிநிதி, மகிந்தா சமரசிங்கா குறிப்பிடுகையில், ""இந்த தீர்மானம் உள்நோக்கம் கொண்டது. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள புகார்கள் தவறானவை. இலங்கை மேற்கொண்ட மறுவாழ்வு பணிகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை. இலங்கையை தனித்து விடுவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது,'' என்றார்.
இந்த தீர்மானத்தை ஆதரித்து இந்திய உறுப்பினர் திலீப் சின்கா பேசியதாவது: இலங்கை, 13வது அரசியல் சட்டதிருத்தத்தை அமல்படுத்த வேண்டும். மனித உரிமை ஆணைய பிரதிநிதிகள் இலங்கையை பார்வையிட அனுமதிக்க வேண்டும். வடக்கு மாகாண மக்கள் தேர்தலை சந்திப்பதற்குரிய சூழலை உருவாக்க வேண்டும். மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் ஏற்கும் வகையிலான, நம்பிக்கைக்குரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இலங்கை எடுத்துவரும் நல்லிணக்க நடவடிக்கைகள், விரிவு மற்றும் விரைவு படுத்தவும் வேண்டும். எனினும், இலங்கை உடனான உறவை துண்டிக்க விரும்பவில்லை. இவ்வாறு திலீப் சின்கா கூறினார்.
பாக்.,எதிர்ப்பு: இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது. அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தில், திருத்தங்கள் பல செய்யப்பட வேண்டும், என கூறிய பாகிஸ்தான் பிரதிநிதி, எதிர்த்து ஓட்டளித்தார்.
எழுத்து பூர்வமாக தாக்கல்: தீர்மானம் குறித்து கடைசி நேரம் வரை இந்தியாவின் முடிவு சஸ்பென்சாக இருந்ததால், "எழுத்து பூர்வமான கருத்தை இந்தியா பதிவு செய்ய முடியாது' என, கூறப்பட்டது. ஆனால், தீர்மானம் தொடர்பான கருத்து வலுவுள்ளதாக இருக்க வேண்டும், என்பதால்,இந்தியா, எழுத்து பூர்வமான கருத்தை, இந்த சபையில் பதிவு செய்துள்ளது.
திருத்தம் இல்லை: இலங்கையில் "இனப் படுகொலை' நடந்ததாக கூறி, இந்தியா தனது கருத்தை பதிவு செய்யும் படி, தமிழக கட்சிகள் வற்புறுத்தின. ஆனால், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில், இந்தியாவின் தரப்பில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை கூர்ந்து ஆய்வு செய்தோமானால் இலங்கை வாழ் மக்களுக்கும் பிரச்சனையால் அங்கு வாழ்ந்த மக்களுக்கும் பலன் அளிக்க கூடியது சரியாக பிரச்சனை தீர்க்க கூடியது இந்தியாவின் சிறப்பான வலுவான பதிவுகள் அமெரிக்க தீர்மானத்திற்கு உறுதுணையாக அமைகிறது. இந்திய அரசு பிரச்சனை கூர்த்து நோக்கி நேற்று..,இன்று..,நாளை என்று தன் நடுநிலைமை சரியாக பதிவு செய்துள்ளது தெரிகிறது. பாராட்டுகள்.வாழ்த்துகள். இதுதான் நமது ஜனநாயக சிறப்பான முறைமை.., மேலும் இன்னும் சிறப்பாக வளர வேண்டும்..,
இலங்கை பிரச்னையை பொறுத்தவரையில் நம் நாடு முடிந்த அளவுக்கு தமிழ் உணர்வாளர்களின் பேச்சை கேட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற விவகாரங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை வற்புறுத்தினால், அது நம் நாட்டை திரும்பி அடிக்க வைப்பு உண்டு, காரணம் காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கை எழுவதற்கு வாய்ப்புண்டு. ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவர சில நாடுகள் முயற்சி செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதை தடுக்க வேண்டிய நிலையில் உள்ள இந்திய அரசை, இலங்கையில் சர்வதேச விசாரணை தேவை என்ற அமெரிக்க கோரிக்கை சங்கடப்படுத்தும். அதனால் தான் முழுமையாக சர்வதேச விசாரணையை இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை... காஷ்மீர் மத்திய அரசின் பிரச்சனை மட்டும் அல்ல இது நம் அனைவரின் பிரச்சனையும் தான் (காஷ்மிருக்காக கோயம்புத்தூர் மும்பையில் குண்டு வைத்து பொது மக்களை கொலை செய்கிறார்கள்), வெளியுறவு கொள்கையை பொருத்தவரையில் மத்திய அரசிடம் விட்டு விடுவது தான் நல்லது, எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டின் நலனுக்கு எது நல்லது என்ற அடிப்படையில் தான் நாம் முடிவு செய்ய வேண்டும், இலங்கை தமிழர்களை இலங்கை பிரஜைகளாக தான் நாம் பார்க்க வேண்டும், அந்த அடிப்படையில் இலங்கை அரசை நாம் நெருக்கலாம் இலங்கை தமிழர்களுக்கு என்ன உரிமை வேண்டும் என்றும் நாம் அவர்களுக்கு உதவலாம் (முன்பு ராஜீவ் காந்தி அவர்கள் இந்த அடிப்படையில் தான் இலங்கை தமிழர்களுக்கு உதவினார் ஆனால் அவர் செய்த தவறு விடுதலை புலிகள் மட்டும் இலங்கை தமிழரின் ஒரே பிரதிநிதியாக பார்க்காமல் அனைத்து தமிழர்கள் பிரதிநிகளையும் பார்த்து அவர்களுக்கும் அதிகாரம் கிடைக்க பார்த்தார் அதனால் புலிகளால் மிக மோசமாக அவமான படுத்தப்பட்டு கொல்லபட்டார்) அது போல் திரும்ப நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் இலங்கை தமிழர்கள் தான் இலங்கை அரசோடு பேச வேண்டும் அவர்கள் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும் (தனி ஈழமாக இருந்தாலும்) நாம் இந்த பிரச்சனையில் முழுமையாக தலையிட கூடாது நாம் செய்ய வேண்டியது இலங்கை அரசும் இலங்கை தமிழரும் பேச வைக்க வேண்டும் அதற்க்கு தேவையான நடவடிக்கைகளை நம் அரசு (தமிழக அரசியல்வாதிகள்) எடுக்க வேண்டும்.... ஆனால் தமிழகத்தில் எல்லோரும் உணர்ச்சியின் அடிப்படையில் தவறாக பேசுகிறார்கள், இது எதுவும் பிரச்சனை தீர்வதற்கான வழி அல்ல

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.