Ramadoss slams Karunanidhi on srilankan tamil issue | இலங்கைத்தமிழர் மீது கருணாநிதிக்கு திடீர் பாசம்: ராமதாஸ் கடும் தாக்கு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலங்கைத்தமிழர் மீது கருணாநிதிக்கு திடீர் பாசம்: ராமதாஸ் கடும் தாக்கு

Updated : மார் 23, 2013 | Added : மார் 21, 2013 | கருத்துகள் (18)
Advertisement
Ramadoss slams Karunanidhi on srilankan tamil issue

மதுரை: ""தி.மு.க., தலைவர் கருணாநிதி நினைத்திருந்தால், 2009 ல், இலங்கை இறுதி கட்டப் போரை நிறுத்தியிருக்கலாம். தற்போது இலங்கை தமிழர் மீது பாசம் வந்தது போல நடிக்கிறார்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சாடினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: இலங்கை தமிழர் பிரச்னையில், தனி ஈழம்தான் தீர்வு என, 1992 லிருந்து பா.ம.க., வலியுறுத்துகிறது. கடந்த 1985 ல், டெசோ அமைப்பை ஏற்படுத்தி, "தனி ஈழமே தீர்வு' என கருணாநிதி கூறினார். காங்., தலைமையில் கூட்டணியில் இணைந்த பின், தனிஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை. இப்பிரச்னையில் தி.மு.க., நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளது. இலங்கைத்தமிழர் மீதான அக்கறையினால், காங்., கூட்டணியிலிருந்து, கருணாநிதி விலகவில்லை. மாறாக, அக்கூட்டணியிலிருந்து விலகும் நேரத்தை, பார்த்து கொண்டிருந்தார். தற்போது இப்பிரச்னையை காட்டி, வெளியேறி விட்டார். கருணாநிதி நினைத்திருந்தால், இலங்கை இறுதி கட்ட போரை நிறுத்தியிருக்கலாம். கனிமொழி, திருமாவளவன் போன்றவர்கள், ராஜபக்ஷேயை சந்தித்து, தமிழர் மறுவாழ்வு குறித்து பேசுவதாக கூறி, விருந்து சாப்பிட்டு, மூடை, மூடையாக பரிசு பொருட்களுடன் திரும்பினர். அதையும் கருணாநிதி பாராட்டினார். தற்போது இலங்கை தமிழர் மீது பாசம் வந்தது போல நடிக்கிறார்.


ஐ.நா., சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா ஆலோசனையின்படி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தை கொண்டு வருவதால், இலங்கை தமிழருக்கு நன்மை ஏற்பட போவதில்லை. ராமதாஸ் அமைதியை விரும்புவன். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முன் நிற்பவன். இத்தனை ஆண்டுகளாக தென் மாவட்டங்களுக்கு நான் சென்று வந்ததற்கு பின்னால், எந்த கலவரமும் ஏற்படவில்லை. மதுரையில் நுழையக் கூடாது என, எனக்கு தடை விதிக்க யாருக்கும் உரிமையில்லை, என்றார்.


காற்றுள்ளவரை கூட்டணி இல்லையாம்!: லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து கூறுகையில், ""கார் (மேகம்), கடல், பார்(பூமி), காற்றுள்ளவரை தி.மு.க.,- அ.தி.மு.க., வுடன் கூட்டணி கிடையாது,'' என்றார் ராமதாஸ், திட்டவட்டமாக.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
22-மார்-201305:55:32 IST Report Abuse
Pannadai Pandian மருத்துவர் கூறுவது இங்கு தினமலரில் கடை கோடி வாசகனும் விமர்சிப்பது தான். அவர் எல்லோருடைய கூற்றையும் ஆதரிக்கிறார். ஒருவேளை இந்நேரத்தில் அன்புமணி மத்திய அமைச்சரை இருந்திருந்தால் மாமனார் கிருஷ்ணசாமி பேச்சை கேட்பாரா அல்லது தந்தை மருத்துவர் பேச்சை கேட்பாரா ??? அல்லது இவர்களும் கருணாநிதி போல நாடகம் போட்டு இப்போதுதான் வெளியே வந்திருப்பார்களா ???
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
22-மார்-201305:29:19 IST Report Abuse
s.maria alphonse pandian திமுக...அண்ணா திமுக கட்சிகள் கூட்டணிக்காக இவரை அணுகலாம் என்பதை சிம்பாலிக்காக கூறியுள்ளார்...அரசியலில் உள்ளவர்களுக்கு இந்த code புரியும்....சில நேரங்களில் நல்ல கருத்துக்களையும் இவர் துணிவுடன் கூறுவதுண்டு...தனி ஈழம் என்பது சர்வாதிகார நாடாக அமைந்துவிட கூடாதென்பதற்காக சில நேரங்களில் திமுக அமைதி காத்ததுண்டு...இப்போதைய அங்கு நிலவும் சூழ்நிலை தனி ஈழத்துக்கு ஆதரவாக உள்ளது.....
Rate this:
Share this comment
sivakumar - Thirumayam,இந்தியா
26-மார்-201314:13:53 IST Report Abuse
sivakumarஅவராவது சில நேரங்களில் நல்ல கருத்தை சொல்வார். நீயோ எப்ப பார்த்தாலும் சாக்கடைக்கு சப்போர்ட் பண்ற. கொஞ்சம் முழிச்சு பாரு....
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
22-மார்-201303:33:13 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை கணவன் மனைவியா வாழ்ந்தவங்க! யார் கண்ணு பட்டுதோ இப்போ இலங்கை தமிழர் பிரச்சனைல ஒருத்தர் மேல ஒருத்தர் குறை சொல்லிக்கிறாங்க.
Rate this:
Share this comment
Cancel
Vaithi Esvaran - Chennai,இந்தியா
22-மார்-201302:32:03 IST Report Abuse
Vaithi Esvaran தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் ராமதாசையும் திரு மா வளவனையும் கிட்டத்தில் சேர்க்கவே கூடாது.அன்புமணி செயல்படும் அமைச்சராக மத்தியில் இருந்தார். ஆனால் ஜாதி அரசியலை எதிர்த்து ஒன்றும் செய்யவில்லை.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
22-மார்-201302:25:04 IST Report Abuse
NavaMayam ""கார் (மேகம்), கடல், பார்(பூமி), காற்றுள்ளவரை தி.மு.க.,- அ.தி.மு.க., வுடன் கூட்டணி கிடையாது " முதலில் உங்கள் கட்சி இருக்குமா என்று பாருங்கள்....பின் யாருடன் கூட்டணி , பவர் ஸ்டார் ? நல்ல காமெடி கூட்டணி ......இப்போ அவருடன் கூட்டணி சேரத்தான் பெரிய நடிகர்களிடம் போட்டி ...
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
22-மார்-201302:20:36 IST Report Abuse
NavaMayam அய்யா ....உங்கள் இன பற்றுபோல , கலைஞருக்கு வருமா ....
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
22-மார்-201302:14:30 IST Report Abuse
Sekar Sekaran டாக்டரின் துணிச்சல் இது என்பேன். பரவாயில்லை சமயங்களில் சற்று சரியாகவே பேசுகின்றார். ஆனால் ஒன்றே ஒன்றுதான்..என்னதான் காலம் தன்னை மாற்றிகொண்டாலும்..நீங்கள் விடாப்பிடியாய் சாதியை வைத்து அரசியல் செய்வது மட்டும் புரியவே இல்லையே..சொந்த சாதி சனமே உங்களை தோற்கடிக்கும் கேவலத்தை நீங்கள் சந்தித்த போதும் எதற்காக இந்த துணிச்சலான முடிவோ..
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
22-மார்-201301:55:26 IST Report Abuse
கைப்புள்ள கத்திரி என்பது ப்ரின்ஜால் கத்திரி என்பது சிசர். இதில் எது சரி? அப்படி இருக்கிறது இவருடைய அறிக்கை.
Rate this:
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
22-மார்-201305:28:01 IST Report Abuse
Samy Chinnathambiபுரியுது புரியுது கைபுள்ள, உங்க தலைமுடியை போல உங்க .......யும் கத்திரிசிடாங்க... ... .......அதுக்கு எல்லாம் ஜுரொங்க்ல இருந்து எழுதணும்...........
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
22-மார்-201301:41:41 IST Report Abuse
Vettri என்ன மருத்துவரே ரொம்ப சீரியஸா பேட்டி குடுத்திட்டு கடைசியிலே வயிறு புண் ஆகிற மாதிரி ஒரு ஜோக் அடிச்சிடீங்க. நீங்க கூட்டணி சேருவதற்கு ரெடியாக இருந்தாலும் உங்களை யாரும் சேர்த்துக்க மாட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
22-மார்-201301:38:43 IST Report Abuse
jagan என்ன இன்னும் சவுண்ட் விடலையேனு பார்த்தேன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை