சென்னை: வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, சொகுசு கார்கள் தொடர்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அவரது நண்பர் ராஜா சங்கர் ஆகிய இருவரின் வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். "இந்த சோதனை, பழி வாங்கும் அரசியல் நடவடிக்கை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், "சட்டப்படி எதிர் கொள்வோம்' என, ஸ்டாலினும் தெரிவித்தனர்.
"ஹம்மர்' என்ற சொகுசுகார்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக, முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் நேற்று காலை அதிரடி சோதனையை சி.பி.ஐ., அதிகாரிகள் மேற்கொண்டனர்.
நீங்களே சொல்லிட்டீங்க...! அவர்கள் கேட்ட ஆவணங்களை, ஸ்டாலின் குடும்பத்தினர் எடுத்துக் கொடுத்துள்ளனர். அந்த ஆவணங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையிட்டனர். காலை, 8:00 மணிக்கு, நடைப்பயிற்சியை முடித்து, ஸ்டாலின் வீட்டிற்கு வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் வேலு, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வந்தனர். தன் காரில் இருந்து, நடைப் பயிற்சி உடையுடன், ஸ்டாலின் இறங்கினார். அங்கு கூடியிருந்த நிருபர்களை, அவர் சந்தித்தார். "மத்திய அமைச்சரவையில்இருந்து, வாபஸ் பெற்ற மறுநாள் உங்கள் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியது பழி வாங்கும் நடவடிக்கையாக கருதுகிறீர்களா?' என, நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு ஸ்டாலின், ""நிருபர்களே பதில் சொல்லி விட்டீர்கள். இந்த சோதனையை அரசியல் மிரட்டலாக, உருட்டலாக பார்க்கிறோம். சட்டப்படி எதிர்கொள்வோம். சி.பி.ஐ., அதிகாரிகள் எதற்காக வந்துள்ளனர் என்று எனக்கு தெரியாது. அவர்கள் வெளியே வரும் போது நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்,'' எனக் கூறிவிட்டு, வீட்டிற்குள்ளே சென்று விட்டார். தங்களது சோதனையை முடித்த அதிகாரிகள், 8:10 மணிக்கு, வெளியே வந்தனர். அப்போது அவர்களிடம் நிருபர்கள், "ஸ்டாலின் வீட்டில், எதற்காக சோதனை நடத்தப்பட்டது?' எனக் கேட்டனர்.
இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்: மா.சுப்பிரமணியன் கூறுகையில், "அரசியல் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்' என்றார். சென்னை தி.நகரில் உள்ள ஸ்டாலின் நண்பர் ராஜா சங்கர் வீட்டிலும், சொகுசு கார் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஸ்டாலின் வீட்டிற்கு, அவர் சகோதரி செல்வி, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் குவிந்தனர். கட்சியினர் யாரையும், ஸ்டாலின் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. சி.பி.ஐ., அதிகாரிகள், தங்களது சோதனையை முடித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டதும், ஸ்டாலினும் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க, புறப்பட்டு சென்றார். அங்கு கூடியிருந்த, தொண்டர்கள் கூட்டமும் கலைந்தது.
"பழிக்குப் பழி?' சோதனைப் பற்றி பல கட்சித் தலைவர்களும், எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். அந்தக் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். மத்திய அமைச்சர், இந்தச் சோதனைக்கு ஒப்புதல் தரவில்லை என்பதை, அவரே வெளிப்படையாக அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார். அதற்கு மேல் நான் எதுவும் சொல்வது முறையல்ல. பழி வாங்கும் அரசியல் டில்லியிலே மாத்திரமல்ல; தமிழகத்திலும் இருக்கிறது. இவ்வாறு கருணாநிதி கூறினார்.
முகவரி மாறிச்சென்ற அதிகாரிகள்: வரிஏய்ப்பு செய்து, 33 கார்களை இறக்குமதி செய்ததில், மத்திய அரசுக்கு, 48 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில், 18 இடங்களில் நடந்த சோதனையில், 17 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில், 18 இடங்களில் சோதனை நடத்திய, சி.பி.ஐ., அதிகாரிகள், கோடம்பாக்கம் சர்க்குலர் ரோட்டில் உள்ள பிரவீண், 40, என்பவர் வீட்டுக்கு வந்தனர். பின்னர், முகவரி மாறி, தவறுதலாக வீட்டுக்கு வந்த, சி.பி.ஐ., அதிகாரிகள், வருத்தம் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
"சோதனை நடந்தது தவறு' என, மத்திய அமைச்சர் சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் அப்படி சொல்லியிருக்கிற போது, "நான் நம்ப முடியாது' என, சொல்ல முடியாது. தி.மு.க.,வைச் சுற்றி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமான நடவடிக்கைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன -கருணாநிதி
இதிலிருந்து தெரிகின்றது இது அனைத்தும் நாடகம். இவருக்கும் சிதம்பரத்திற்கும் என்ன விதமான நட்புறவு என்று எல்லோருக்கும் தெரியும். கருணாநிதி தி மு கவிற்கு மக்கள் மத்தியில் தற்போது ஆதரவு இல்லை என்று கண்கூடாக தெரிந்து கொண்டார். அதனால் அனுதாப அலைகளில் எப்படியாவது மக்களை தன வசம் இழுக்க பார்க்கிறார். இவர் ஆதரவை வாபஸ் பெற்றவுடன் அரேங்கேறும் நடகங்கள். அதிலும் இதுவும் ஒன்று. இன்னும் நடக்கும்.
இது வரை தி மு க தன நிலயை அடுத்த கூட்டணி யாருடன் சொல்லவில்லை. இது தி மு க மீது மக்கள் அனுதாபம் பட வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி விளையாட்டு. ஜெயலலிதா வீட்டில் 1995 இல் சிதம்பரம் துணையோடு சி பி ஐ ரைட் நடத்தியது. இது தமிழ் நாட்டில் மக்கள் அனைவர்க்கும் தெரியும். மீண்டும் காங்கிரஸ் அதே நாடகத்தை அரங்கேற்றியது. இது சிதம்பரத்திற்கு தெரியும்.
சட்டத்தில் உள்ள பல ஓட்டைகளில் ஒன்றின் வழியாக இந்த HUMMER காரும் வெளியே ஓடி வந்து விடும் என்று எதிர்ப்பார்ப்போம். என்ன இதற்க்கு சட்டத்தில் இருப்பதிலேயே ஒரு பெரிய ஓட்டையை தேடி தான் வெளியே வர வேண்டும். ஏன் என்றால் காரும் பெரிது, அதன் விலையும் பெரிது, தற்போதைய திமுக பரிதாப நிலையும் பெரிது. மாநிலத்தில் மக்கள் அவர்களை கை விட்டு விட்டார்கள். மத்தியில் கூட கைவிடபட்டார்கள். இனி இவர்கள் அரசியல் அனாதைகளாக வலம் வர வேண்டியது தான்..
"""அந்த வாகனம் உதயநிதியினுடையதே அல்ல. ஆர்.சி. புத்தகத்தை பார்த்தாலே தெரியும். அது யாருடைய வாகனமோ. திரைப்படம் தயாரிப்பதற்காக உதயநிதி வாடகைக்கு எடுத்திருக்கிறார். அந்த வாகனத்தின் சொந்த காரரை நேரில் அவர் பார்த்ததில்லை. தொலைபேசியில் கூட பேசியதில்லை. அப்படி இருக்கும்போது அந்த கார் எப்படி உதயநிதியின் சொந்த வாகனமாக இருக்க முடியும். இதோ அந்த காரை வாடகைக்கு எடுத்ததற்காக பணம் கொடுத்த ரசீது. மக்களை மகிழ்விக்கும் விதமாக திரைப்படங்கள் எடுக்க உதயநிதி அவர்கள் இரவு பகலாக கண் விழித்து யோசித்து யோசித்து உருவாக்கி வருகிறார். அப்படி பட்ட ஒருவரை அரசியல் காழ்புணர்ச்சி என்ற சகதியில் இழுத்து போட்டு அவரை முடக்கி அமுக்கி திரைப்படங்கள் எடுக்க முடியாமல் செய்து பொது மக்களை வாட்டும் இந்த மத்திய அரசின் கைபாவையான சி.பி.ஐ அதிகாரிகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்களுக்கு மக்கள் ஆதரவு உண்டு. உதயநிதி மீது நடவடிக்கை எடுத்தால் அவரது ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். போராட்டம் செய்வார்கள். திரைபடதுறையே திரண்டு வந்து போராட்டம் செய்யும். மாணவர்கள் உண்ணா விரதம் இருப்பார்கள்.. நாங்கள் மட்டும் வழக்கை சட்டப்படி சந்திப்போம்.. பாவம் யார் பெற்ற பிள்ளையோ இந்த வாகனத்தின் சொந்தகாரர்""" என்று ஸ்டாலின் அறிக்கை விடுவார்.
"""ஒரு மாநிலத்தின் ஏழை பங்காளன், ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பவன், ஏழைகளுக்காக வாழ்பவன், ஆட்சி போனதால் எழையாகிவிட்ட கட்சியை சேர்ந்தவன், ஏழைகளுக்கு குரல் கொடுப்பதற்காகவே பிறந்தவன், ஏழை மக்களை அரவணைப்பவன், எல்லா விதத்திலும் ஏழை. அப்படிப்பட்ட ஒரு கட்சி தலைவரின் மகனுக்கு பிறந்த மகன் ஒரு இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் சிறிய கார் வைத்து கொள்ள கூட உரிமை இல்லையா. ஏழைகளின் வாழ்வில் வசந்தம் மலர செய்யும் விதமாக திரைப்படங்கள் எடுக்க வேண்டி பல இடங்களுக்கு பாதுகாப்பாக பயணம் செல்ல வேண்டி இருக்கிறது.. ஏழைகள் தங்கள் கவலைகளை மறந்து திரைப்படங்கள் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் தயாரிப்பு வேலைகளை பார்ப்பதற்கு பல ஊர்களுக்கு பயணம் செல்ல வேண்டி உள்ளது. அந்த வகையில் இதை போன்ற ஒரு ஹம்மர் வாகனம் வாங்க வேண்டி வந்தது. அதற்கு போய் வரி கட்டி தான் எடுக்க வேண்டும் என்றால் எப்படி ஒத்து கொள்ள முடியும்? ஏழைகளுக்காக அவர்கள் சந்தோஷத்துக்கு தானே இந்த வாகனமே வாங்க பட்டுள்ளது? ஒரு வகையில் இது ஏழைகளுக்கான வாகனம் தான். ஆகவே தான் வரி கட்ட தேவை இல்லை என்று நாங்களே முடிவு செய்து விட்டோம். இதை கூட பழிவாங்கும் விதமாக ஒரு வழக்காக போட்டால் அதையும் நாங்கள் சட்டப்படி சந்திப்போம். நாங்கள் சந்திக்காத சட்டமா?"""" என்று அடுத்த அறிக்கையில் கருணா அவர்கள் கூறினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. அதற்கு கூட ஆதரவு கருத்துக்கள் போட இங்கே ஆட்கள் தயாராக உள்ளனர்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.