புதுடில்லி: ""ஸ்டாலின் வீட்டில், சி.பி.ஐ., நடத்திய சோதனையில், அரசின் பங்கு எதுவுமில்லை,'' என, பிரதமர், மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர், மன்மோகன் சிங், பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ஸ்டாலின் வீட்டில், சி.பி.ஐ., சோதனையால், நாங்கள் மன வருத்தம் அடைந்துள்ளோம்; இதன் பின்னணியில் அரசின் பங்கு எதுவுமில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். யார் உத்தரவின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்ற விவரத்தை பெற்று வருகிறோம். இது, நடந்திருக்கக் கூடாது. அதுவும், சோதனை நடந்த நேரம்... மிகவும் துரதிருஷ்டவசமானது. இவ்வாறு, பிரதமர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கிண்டல்: மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர், சீதாராம் யெச்சூரி கூறியதாவது: மத்திய அரசுக்கு, தி.மு.க., அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட, 24 மணி நேரத்தில், ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை நடந்தது குறித்து, தனக்கு எதுவும் தெரியாது என, அரசின் தலைவராக விளங்கும் பிரதமர், மன்மோகன் சிங் தெரிவிக்கிறார்; இது மிகவும் பரிதாபமானது. யார் சோதனை நடத்த உத்தரவிட்டார்கள் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம்; யார் சோதனையை தடுத்து நிறுத்தினார்களோ, அவரே தான் சோதனைக்கு உத்தரவிட்டவர். இந்த சோதனை நடவடிக்கை, ஆதரவளிக்கும் பிற கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு, யெச்சூரி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
how can some one give directives to cbi, if it is indepent? secondly why should pm or P chidambaram worry about these? they should only say that cbi is doing its duty and we cannot interefere..
or may be it is done by some cong and dmk ppl only to bring more sympathy to dmk so that cong can split in tamilnadu and align with dmk in the next elections.
சி.பி.ஐ., ரெய்டில் அரசின் பங்கில்லை...ஆனால் எங்களின் பங்கு இருக்கிறது... இலங்கை இனப்படுகொலையில் அரசின் பங்கு இல்லை ஆனால் எங்களின் பங்கு இருக்கிறது...2G ஊழல்ல அரசின் பங்கு இல்லை ஆனால் எங்களின் பங்கு இருக்கிறது...VIP ஹெலிகாப்ட்டர் ஊழல்ல அரசின் பங்கு இல்லை ஆனால் எங்களின் பங்கு இருக்கிறது...இத்தாலி வீரர்கள் அவங்க நாட்டுக்கு ஓடுனதுல அரசின் பங்கு இல்லை ஆனால் எங்களின் பங்கு இருக்கிறது...COMMONWEALTH ஊழல்ல அரசின் பங்கு இல்லை ஆனால் எங்களின் பங்கு இருக்கிறது...ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்ல அரசின் பங்கு இல்லை ஆனால் எங்களின் பங்கு இருக்கிறது...பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது...முடியல...
1. கோழியிலிருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா? ... ... ... ... ... ... 2. சி.பி.ஐ. யின் செயல்பாடுகளால் திமுக வெளியேறியதா? திமுக வெளியேறியதால் சி.பி.ஐ. செயல்படுகிறதா? ... ... ... கேள்விகள் ஒன்றுபோல் இருந்தாலும், இரண்டாவது கேள்விக்கு பதில் இங்கு கருத்துப் பதிவோர் அனைவரின் மனசாட்சிக்கும் தெரியும் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.