நகரி: திருமலையில், இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், இனிமேல் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. வைகுண்டம்-2, வளாகத்திற்குள் நுழைந்ததும், அவர்களுக்கு தரிசன நேரத்துடன் அடையாள அட்டை வழங்கப்படும். கூண்டுக்குள் அடைந்து கிடக்காமல், வெளியே சென்றுவிட்டு, தரிசன நேரத்திற்கு வரும் வகையில், புதுவசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வைகுண்டம்: திருமலையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு செல்ல, வைகுண்டம் - 1, 2 வளாகங்கள் உள்ளன. இதில், வைகுண்டம்-1 வளாகம், 50 ரூபாய் சுதர்சன டிக்கெட், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், முறைகேட்டில் ஈடுபடுவதால், பலவித தவறுகள் நடக்கின்றன. தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் நடந்து வரும் முறைகேட்டால், முறையாக வரும் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தேவஸ்தானத்திற்கு ஏற்படும் அவப்பெயரை களைய, ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சேவா தொண்டர்களாக வரும் பக்தர்களை கொண்டு, ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மொட்டை: என்ன தான் மாற்றம் கொண்டு வந்தாலும், இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்காக இரண்டு, மூன்று நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மொட்டை போடுவதற்கு, குளிப்பதற்கு என, நேரம் செலவிட வேண்டியுள்ளது. இதை தவிர்த்து, இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தில், வெளியில் சென்று மொட்டை அடிப்பது உட்பட, பிற பணிகளை முடிக்கும் வகையில், புது திட்டம் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கைரேகை: திருமலையில், வைகுண்டம்-2 காம்பளக்சில், இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு, அவர்களது புகைப்படம் மற்றும் கைரேகை பதித்த அடையாள அட்டைகள் வழங்கபடுகின்றன. இதில் தரிசனம் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். வெளியில் சென்று விட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு மீண்டும் வைகுண்டம்-2 வளாகம் வந்தால், சிறிது நேரத்தில் தரிசனம் முடிந்துவிடலாம். வெளியில் செல்லாமல், கூண்டுக்குள் காத்திருக்க பக்தர்கள் விரும்பினால், அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அட பாவிகளா எந்த கடவுள் வந்து இப்படி பக்தர்களை தரிசனம் பண்ண சொல்லுச்சு. Low Class, VIP, VVIP, VVVIP, VIP Recommation நம்மள வச்சு ஒரு மாநிலமே வாழ்ந்துகிட்டு இருக்கு. மொட்டைக்கு 300 கோடி, தரிசனத்துக்கு பல ஆயிரம் கோடி, கிலோ கணக்கில் தங்கம், வைரம். யோசி தமிழா உங்களை திருத்தருக்கு ஒரு கோடி பெரியார் வந்தாலும் நிச்சயமாக சத்தியமாக முடியாதுடா அப்பா.. சாமி ..
நான் 10 நாள் முன்னாடி போயிருந்தேன் , ராத்திரி 12:15 உள்ள போனேன் , அங்க போர்டுல காலை 9:00 மணி தரிசனம்னு போட்டிருந்தாங்க , உள்ள இருக்கும் போது பார்த்தேன் குழந்தைகளுக்கு தொட்டில் கூட வெச்சிருக்காங்க , 2 ரூமுக்கும் சேர்த்து ஒரு பாத்ரூம் & toilet வெச்சிருக்காங்க ( very hygienically maintained ) இருந்த எல்லாருக்கும் பால் கொடுத்தாங்க . காலை 4:00 மணிக்கே தரிசனத்துக்கு கதவு தெரந்துட்டாங்க . 5:00 am தரிசனம் முடிஞ்சது .
கூட்டம் இல்லாததால மறுபடியும் 6:15 உள்ள போனேன். போர்டுல 2:00 pm நு போட்டிருந்தாங்க. அப்போ சாப்பிட உப்புமா கொடுத்தாங்க . 8:00 am தரிசனத்துக்கு விட்டாங்க 9:00 am தரிசனம் முடிஞ்சது .
மனசார சொல்லனும்னா அருமையான ஏற்பாடுகள் பண்ணிருக்காங்க, பெண்கள & குழந்தைகள கூட்டிட்டு போகும் போது எப்பவுமே toilet ஒரு prechanaya இருக்கும் , இங்க அந்த problemae இல்லை , லைன்ல போகும் போது கூட toilets இருக்கு.
நல்ல nimathiyana தரிசனம் கிடைக்கும் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.