தமிழகத்தின் நிலவும் கடும் மின் பற்றாக்குறையைப் சமாளிக்க, பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப் படவில்லை. தற்போது, தமிழகத்தில், மின் உற்பத்தி குறைவு மற்றும் உற்பத்தி நிலையங்களில் தொடர் பழுது போன்ற காரணங்களால், 4,000 முதல் 4,500 மெகாவாட் அளவுக்கு, மின் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்தாண்டு ஜூன் மாதத்திற்குள், மின் வெட்டு பிரச்னை தீர்க்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்து இருந்தார். மேலும், செயல்பாட்டில் உள்ள புதிய மின் திட்டங்களிலிருந்து, 3,230 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் கூறியிருந்தார். இதில், வல்லூர் மின் உற்பத்தி திட்டத்தில், 500 மெகாவாட் திறன் கொண்ட முதல் அலகு மட்டுமே மின் உற்பத்தியை துவங்கி உள்ளது. அரசின் புதிய கணக்குப்படி, தற்போது நிறுவப்பட்டு வரும் வல்லூர், மேட்டூர், வட சென்னை மற்றும் தூத்துக்குடி திட்டங்களில் இருந்து படிப்படியாக 3,230 மெகாவாட் மின்சாரம் 2014 மார்ச் மாதத்திற்குள் பெறப்படும். இதில், கூடங்குளம் மின்சாரத்தை அரசு கணக்கில் கொள்ளவில்லை என்பது, குறிப்பிடத்தக்கது. ஆனால், ஏற்கனவே தாமதமாகி வரும் இந்த திட்டங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழு செயல்பாட்டிற்கு வருமா என்பது சந்தேகத்திற்குறிய ஒன்று தான். அதுவரை பற்றாகுறை நிலை நீடிக்கும் என்பதே நிதர்சன உண்மை. இந்த திட்டங்கள் அரசு அட்டவணைப்படி செயல்பாட்டிற்கு வந்தாலும், தற்போதய நிலவரப்படி உள்ள பற்றாகுறை நிலை மட்டுமே தீர வாய்ப்பு உள்ளது. அப்போது உயரும் மின் நுகர்வை சமாளிக்க புதிய குறுகிய கால திட்டங்கள் தேவை.
பழைய திட்டங்கள்: இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ள எண்ணூர் விரிவாக்க திட்டம், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல (மின் உற்பத்தி) திட்டம் மற்றும் உடன்குடி திட்டங்களுக்கான பணி இந்த ஆண்டு துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் இருந்து ஏறத்தாழ 3,240 மெகாவாட் மின்சாரம் பெறப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவை செயல்பாட்டிற்கு வருவதற்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் தமிழகத்தில் மின் நுகர்வு பல மடங்கு அதிகரித்து இருக்கும்.
மோசமான நிதி நிலை: கடந்த, 2011ம் ஆண்டு, வாரியத்தின் கடன், 45 ஆயிரம் கோடி ரூபாயாகும். நிதி நெருக்கடியை சமாளிக்க, 2011-12ம் ஆண்டில், 7,913.35 கோடி ரூபாயும், 2012-13ம் ஆண்டில், திருத்த மதிப்பீட்டில், 11,242 கோடி ரூபாயும் தமிழக மின் வாரியத்திற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், மின் கட்டணம் 37 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இருப்பினும், வாரியம் நிதி நெருக்கடியில் இருந்து மீளவில்லை என, மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த நிதியாண்டில் மட்டும், மின் வாரியத்திற்கு, 8,153 கோடி ரூபாய் அளவிற்கு, நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், அவர்கள் கூறுகின்றனர். இதை சமாளிக்க மின் வினியோகத்தின் சில பகுதிகள் தனியார்மயமாக்கப்படலாம் என்றும், இந்த ஆண்டும் மின் கட்டணத்தில் மாற்றம் இருக்கலாம் என்றும் மின் துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
வினியோகம் தனியார் மயம்: இது குறித்து, மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு மின் வாரியங்களின் நிதி நிலையை மேம்படுத்த, சதுர்வேதி மற்றும் சுங்குலு ஆகிய இரு குழுக்களை அமைத்தது. இக்குழுக்கள், அரசிடம் அறிக்கை அளித்துள்ளன. இதில், நிதியை நிலையை மேம்படுத்த பல வழிமுறைகளை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நிதி சீரமைப்பு திட்டத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இந்த இரண்டு குழுக்களின் பரிந்துரைகளில் ஏதேனும் ஒன்றை அரசு பின்பற்றும். குறிப்பாக, நகர்ப்புற மின் வினியோகத்தை, தனியாருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மின் கட்டணத்தை சரியான நேரத்தில் உயர்த்தாததே, மின் வாரியத்தின் கடனுக்கு காரணம். மத்திய மின்சார தீர்ப்பாயம், ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 1ம் தேதிக்குள், மின் கட்டணத்தை கட்டாயம் மாற்ற வேண்டும் என, உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன்படி, 2013-14ம் ஆண்டுக்கான, மின் கட்டண உயர்வு பரிந்துரையை, ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. செயல்பாட்டில் உள்ள திட்டங்களில் மின் உற்பத்தியை துவங்குவதில் சில நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை களைந்து, மின் உற்பத்தியை துவங்க, இன்னும் சில காலம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
"தினமலர்' செய்தி எதிரொலி: "சர்க்கரை ஆலைகள் மூலம், 183 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம், 2013-14ம் ஆண்டிலிருந்து செயல்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், சர்க்கரை ஆலைகள் மூலம், 183 மெகாவாட் மின் உற்பத்திக்கு, 1,083 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான ஒப்பந்த பணிகள் அனைத்தும் முடிந்தும், மின் உற்பத்திக்கான பணிகள் துவங்கவில்லை. இது குறித்து, கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், கரும்பு அரவை கழிவிலிருந்து, 183 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம், 2013-14ம் ஆண்டில் செயல்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்நிதியாண்டில் மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த, பல்வேறு சர்க்கரை ஆலைகளுக்கு, குறுகிய காலக் கடனாக, 352 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும், அரசு அறிவித்துள்ளது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், சர்க்கரை ஆலைகள் மூலம், 183 மெகாவாட் மின் உற்பத்திக்கு, 1,083 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான ஒப்பந்த பணிகள் அனைத்தும் முடிந்தும், மின் உற்பத்திக்கான பணிகள் துவங்கவில்லை. இது குறித்து, கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், கரும்பு அரவை கழிவிலிருந்து, 183 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம், 2013-14ம் ஆண்டில் செயல்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது....
எல்லாவற்றுக்கும் பழி போட கருணாநிதியும் ,அதையெல்லாம் நம்புவதற்கு தமிழக மக்களும் இருக்கும்வரை இவர்கள் ஏன் கவலைப் பட வேண்டும்......???
It is time TNEB is dismantled , decentralized & handed over to private energy players with capability to administer.All non conventional esp,Solar, bio mass msut be perceived with private partners for long term.The board has become a lame duck and it cannot lean on government for ever and swallow tax payers money
கடந்த தி.மு.க., ஆட்சியில், சர்க்கரை ஆலைகள் மூலம், 183 மெகாவாட் மின் உற்பத்திக்கு, 1,083 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான ஒப்பந்த பணிகள் அனைத்தும் முடிந்தும், மின் உற்பத்திக்கான பணிகள் துவங்கவில்லை. இது குறித்து, கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது///....பரவாயில்லையே தினமலர்கூட திமுகா ஆட்சியில் என்ற வார்த்தயை பயன்படுத்தியுள்ளதே... என்ன செய்ய இந்த ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டம் போட்டிருந்த்தாலாவது பின்னி பெடலெடுக்கலாம். ஆனால் ஆயா வாத்து முட்டைய தவிர வேற எதுவும் போடலையே....திட்டம்னா அது திமுகாதான் தேர்தல் அறிவிப்பில் சொன்னதத்தையும் செய்தது சொல்லாத்ததையும் செய்தது .... தினமலரே பாராட்ட துவங்கிவிட்டது திமுகாவின் திட்டங்களை

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.