'Furious' FM P. Chidambaram forces CBI to call off raids on DMK's MK Stalin | "தவறான புரிதலை ஏற்படுத்தி விடும் என அஞ்சுகிறேன்': சிதம்பரம்| Dinamalar

"தவறான புரிதலை ஏற்படுத்தி விடும் என அஞ்சுகிறேன்': சிதம்பரம்

Added : மார் 21, 2013 | கருத்துகள் (53)
Advertisement
'Furious' FM P. Chidambaram forces CBI to call off raids on DMK's MK Stalin

புதுடில்லி: ""ஸ்டாலின் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையை, நான் ஆதரிக்கவில்லை. இந்த நேரத்தில், இத்தகைய சோதனை, தவறான புரிதலை ஏற்படுத்தி விடும் என அஞ்சுகிறேன்,'' என, நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார்.மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, கடந்த, ஒன்பது ஆண்டுகளாக அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., இரண்டு நாட்களுக்கு முன் விலக்கிக் கொண்டது.

"அஞ்சுகிறேன்': இந்நிலையில், சென்னையில் உள்ள, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் மற்றும் அவரின் நண்பர்கள் என, தமிழகம் முழுவதும், 19 இடங்களில், சி.பி.ஐ., நேற்று காலை சோதனை நடத்தியது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிய உடனேயே, தி.மு.க., தலைவர் மகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக பேச்சு எழுந்தது. சோதனை நடந்த போது, டில்லியில் இருந்த, நிதியமைச்சர் சிதம்பரம், செய்தியாளர்களை அழைத்து, நடந்த சம்பவம் குறித்து, தன் நிலையை விளக்கினார்.

அவர் கூறியதாவது: ஸ்டாலின் வீட்டில், சி.பி.ஐ., மேற்கொண்ட சோதனையை நான் ஆதரிக்கவில்லை. இந்த நேரத்தில், இந்த நடவடிக்கை, தவறான புரிதலை ஏற்படுத்தி விடும் என, அஞ்சுகிறேன். என்ன காரணமாகத் தான் இருந்தாலும், சோதனை அவசியமில்லை. பொதுவாக நான், பிற துறையினரின் செயல்பாடுகளில் தலையிடுவதில்லை. எனினும், இந்த விவகாரம் குறித்து, கருத்து தெரிவிப்பது அவசியம் என்பதால், சி.பி.ஐ., சோதனை குறித்த என் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். சோதனை நடத்தப்பட்டது தவறு என்பதை, சம்பந்தப்பட்ட அமைச்சரான, பிரதமர் அலுவலக இணையமைச்சர், வி.நாராயணசாமியிடம் தெரிவித்துள்ளேன். அவர் தான், கூடுதலாக, சி.பி.ஐ., நிர்வாகத்தை கவனிக்கிறார். இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.

"நாணாவிடம்...': மேற்கொண்டு செய்தியாளர்கள் கேள்விகள் கேட்க முயன்ற போது, ""மேல் விவரங்களை அறிய விரும்பினால், பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சரை கேளுங்கள்,'' என்று, சிதம்பரம் கூறினார். ஸ்டாலின் வீட்டில் நடத்தப்பட்ட, சி.பி.ஐ., சோதனை குறித்து, தொலை தொடர்புத்துறை அமைச்சர், கபில் சிபல் கூறியதாவது: வேண்டுமென்றே யாரோ, சேஷ்டை புரிந்துள்ளனர். மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றுள்ள நேரத்தில், வேண்டுமென்றே யாரோ, குழப்பம் விளைவிக்க முயற்சித்துள்ளனர். இது போன்ற செயலை, யாரும் அறிவுறுத்தியிருக்க மாட்டார்கள். இத்தகைய செயல், தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும்.

எப்போதும் நிகழ்ந்ததில்லை! எங்கள் கூட்டணியில் இருந்து, தி.மு.க., விலகினாலும், இன்னமும் அந்த கட்சியை எங்கள் கூட்டணி கட்சியாகவே நாங்கள் கருதுகிறோம். இதுபோல் எப்போதும் நிகழ்ந்ததில்லை; யார் உத்தரவின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அவரிடம் பதில் கேட்டு பெற வேண்டும். இவ்வாறு, கபில் சிபல் கூறினார்.

பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர், ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது: ஸ்டாலின் வீட்டில், சி.பி.ஐ., நடத்தியுள்ள சோதனை, சி.பி.ஐ., அமைப்பை, காங்கிரஸ் தவறாக பயன்படுத்தி வருகிறது என, நாங்கள் பல காலமாக தெரி வித்து வரும் குற்றச்சாட்டை உறுதி செய்கிறது. அரசை காப்பாற்ற, சி.பி.ஐ.,யை மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது. தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை மூலம், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு, மத்திய அரசு, மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. எங்களை விட்டு விலகினால், உங்களுக்கும், இந்நிலை தான் ஏற்படும் என, மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.Indran - Pudukottai,இந்தியா
22-மார்-201312:45:14 IST Report Abuse
T.Indran ஐயா பசி அவர்களே, சிபிஐ அமைப்பில் உள்ளவர்களை அடிக்கடி ரெய்டு போகவிடாமல் பாதுகாப்பா, பத்திரமா பார்த்து கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. சிபிஐ கடமையை செய்ரதா சொல்லிபுட்டு அவங்க இஸ்டதுக்கு ரெய்டு போய்கிட்டு இருந்தாங்கன்ணா, சிபிஐ தேஞ்சு போய்டாதா . சொல்லுரதை சொல்லியாச்சு. அப்புறம் உங்க இஸ்டம்.
Rate this:
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
22-மார்-201312:40:35 IST Report Abuse
LOTUS நாங்கள் எல்லாம் தப்பவே எப்பவும் யோசிக்கமாட்டோமே ................ஏன் என்றால் கலைஞரும் பாவம் விஜயகந்திர்க்கு அப்புறம் கட்சி ஆரம்பித்தவர்.... நீங்களும் பாவம் செங்கோட்டையனுக்கு பிறகு மந்திரியானவர்............ எனவே நீங்கள் சொல்வதை நாங்கள் நம்புகிறோம்..... ..... என்ன ..இப்ப செய்ததை முன்னமே செய்திருந்தால் இன்னொரு புதிய ஆட்சி vanthirukkum.........
Rate this:
Share this comment
Cancel
sethu - Chennai,இந்தியா
22-மார்-201312:38:05 IST Report Abuse
sethu நாராயணசாமிய காட்டிக்கொடுத்துட்டியே சிதம்பரம். உனது வூழலை நாராயண சாமி கண்டிப்பாக வெளியே சொல்லுவார். தமிழனுக்கு தமிழன் தான் துரோகி ,நல்லது செய்யலனாலும் கெடுதல் செய்யாமல் இருக்க முடியாத பெரு இனம் தமிழன் இனம். அதை நிருபித்து விட்டியே பி சி ,உனக்கு நீ யாரைப்பார்த்து அஞ்சுகிறாய் என்பது எங்களுக்குத்தெரியும், 2004ல் திருச்சி ஏ டி எம் கே தொண்டர்களின் பெண்களிடம் செருப்படி வாங்கியது நினைவுக்கு வந்துள்ளதா.
Rate this:
Share this comment
Cancel
Sri Gugan - Vandavasi,இந்தியா
22-மார்-201312:33:43 IST Report Abuse
Sri Gugan தேர்தலில் தோர்தவங்களை எல்லாம் வெற்றி பெற்றதாக அறிவிச்சதுக்கு நல்ல காமிசீங்க நன்றியை.
Rate this:
Share this comment
Cancel
sethu - Chennai,இந்தியா
22-மார்-201312:32:21 IST Report Abuse
sethu ஆமா சிவகங்கை சீமான் ஸ்டாலின் வீடு ரைடுக்கே பயந்தால் எப்படி? கலாநிதி தயாநிதி அழகிரி கனிமொழி ராஜாத்தி,அப்புறம் ராஜா,நேரு ,வீரபாண்டி ,ராஜாத்தி உதவியாளர் ரத்னம் ,மற்றும் உள்ள உடன்பிறந்த கொள்ளையர்களை தைரியமாக புடிபார். எங்கோ படு வீக்கான ஆட்களால் இந்திய ஆளப்படுகிறது,ஒருவேளை குஷ்புவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் வந்துவிடும் என அஞ்சுகிறேன் என உண்மையை சொல்கிறாரோ.இப்படி கணக்கில்லாமல் என் கொள்ளை அடிப்பானேன், அஞ்ச அஞ்சி வாழ்வானேன். தூ நன்றி கெட்டவன்களே..
Rate this:
Share this comment
Cancel
siruppanikoothan - canberra ,ஆஸ்திரேலியா
22-மார்-201312:22:16 IST Report Abuse
siruppanikoothan அடுத்த தடவை 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் தி மு க வெற்றி அப்படி தானே?
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
22-மார்-201311:07:39 IST Report Abuse
MJA Mayuram உண்மையிலேயே உதயநிதி ஸ்டாலின் முறைகேடாக கார் வாங்கியிருந்ததால் சி.பி.ஐ விசாரிப்பதில் தவறில்லை
Rate this:
Share this comment
Cancel
Vel - Chennai,இந்தியா
22-மார்-201310:53:07 IST Report Abuse
Vel நிருபர்: ஸ்டாலின் வீட்டில் ரெயிடாமே? ப.சி.: என்ன ஸ்டாலின்? நிருபர்: இல்லே ரெயிடு? ப.சி.: என்ன ரெயிடு? நிருபர்: இல்லே சி.பி.ஐ? ப.சி.: என்ன சி.பி.ஐ.? நிருபர்: இல்லே DMK ஆதரவு? ப.சி.: என்ன DMK? நிருபர்: இல்லே நீங்க உள்துறை அமைச்சராக? ப.சி.: என்ன உள்துறை? நிருபர்: இல்லே இப்போ நீங்கதான் நிதி அமைச்சர்? ப.சி.: என்ன நிதியமைச்சர்? நிருபர்: இல்லே V நாராயணசாமி? என்ன நாராயணசாமி? நிருபர்: இல்லே யாரோ சேட்டை? ப.சி.: என்ன சேட்டை? நிருபர், அய்யா நாங்க அப்புறம் வரோம் ப.சி. அப்பா இவங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலடா சாமி. யார்ரா அங்க? நடிகன் வடிவேலு எங்க இருக்கான்னு பாத்து கூப்பிட்டு வாங்கடா? அந்த ஆள் கிட்டே நிறைய நடுப்பு கதுகிட்டாதான் இவங்களை சந்திக்க mudiyum
Rate this:
Share this comment
Cancel
திராவிடன் - Madurai,இந்தியா
22-மார்-201310:50:48 IST Report Abuse
திராவிடன்  சிதம்பரம் அவர்களே லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டபோதும்... தினம் தினம் நம்முடைய மீனவர்கள் சிங்கள படையினரால் தாக்கப்பட்டபோதும் கொஞ்சம்கூட கவலைப்படாத நீங்கள் பத்திரிக்கைகளுக்கு அறிக்கை கொடுக்காத நீங்கள் ஸ்டாலின் வீட்டுல சி.பி.ஐ சோதனை போட்டுருச்சுனு ரொம்ப ரொம்ப கவலைப்படுறீங்களே இது உங்களுக்கே நியாயமா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்ட கதையாத்தான் இருக்கு...உண்மைலே உங்களுக்கு தமிழுணர்வு இருந்திருந்தால் தமிழனுக்கு என்னைக்கி நியாயம் கிடைக்கலையோ அன்னைக்கே அமைச்சர் பதவிய ராஜினாமா செய்துவிட்டு வந்திருந்தீங்கனா மொத்த தமிழகமும் உங்கள் பின்னாடி இருந்திருக்கும்...அய்யா கலைஞரை பார்த்து கத்துக்கங்க தமிழ் உணர்வுணா என்னான்னு? வாசகர்களே கோபப்படாதீங்க நான் ஏதாவது தப்பா சொல்லீருந்தா...
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
22-மார்-201310:44:11 IST Report Abuse
R.Saminathan தி.மு.க. பொருளாரர் திரு.ஸ்டாலின் அவர்கள் இப்பவும் பொறுமை காப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது,.,சாதாரண மனிதனாக எனக்கு திரு.ஸ்டாலின் அவர்களை ரொம்ப பிடிக்கும்...இந்த சி.பி.ஐ. விசாரணையில் திரு.ஸ்டாலின் அவர்கள் மனம் தளர வேண்டாம். உங்க இடத்தில் தவறு இல்லையின்னு பிறகு வருத்த படுறது அர்த்தமே இல்லை,., அரசு அதிகாரிகள் தன் கடமையை செய்ய வேண்டும் அதுவும் சரிதான்..,.,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை