மதுரை :சொத்து குவிப்பு வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மனைவியுடன், மதுரை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.முந்தைய, தி.மு.க., ஆட்சியில், சுகாதாரம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தவர், சாத்தூர் ராமச்சந்திரன். 2006 மே 19 முதல், 2011 மே 13 வரை, அவர் பொறுப்பிலிருந்த காலத்தில், தன் பெயரிலும், மனைவி ஆதிலட்சுமி, 55, பெயரிலும், அதிக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது.லஞ்ச, ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி., சியாமளா தேவி தலைமையில், போலீசார் விசாரித்தனர். வங்கி மற்றும் சொத்து வகையில், 84 லட்சத்து 88 ஆயிரத்து 395 ரூபா# கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ராமச்சந்திரன், ஆதிலட்சுமி மற்றும் சொத்து குவிப்பிற்கு துணை போன, தொழிலதிபர் சண்முகமூர்த்தி, 53, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மதுரை கோர்ட், மூவரும் விளக்கம் அளிக்க, சம்மன் அனுப்பியது. பிப்.,14ல், ராமச்சந்திரன், சண்முகமூர்த்தி ஆஜராயினர்.
சம்மன் கிடைக்காததால், மனைவி ஆதிலட்சுமி ஆஜராகவில்லை. மார்ச் 21க்கு ஒத்தி வைக்கப்பட்ட வழக்கில், மனைவியுடன் ராமச்சந்திரன் நேற்று ஆஜரானார். இருவரிடமும் விசாரணை நடத்திய நீதிபதி கருணாநிதி, வழக்கு விசாரணையை, மார்ச் 25க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.