பெண் கொலை வழக்கில் இருவர் விடுதலை இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை | பெண் கொலை வழக்கில் இருவர் விடுதலை இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் கொலை வழக்கில் இருவர் விடுதலை இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை

Added : மார் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெண் கொலை வழக்கில், சாட்சியங்களை சரியாக நிரூபிக்காத, இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேற்கு சோழந்தூரைச் சேர்ந்த ஜெயமணி, மனைவி பெரியம்மாள். இவர், 24.1.2010 ல் பொட்டகோட்டை கண்மாய் அருகே, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கள்ளகாதலன் செல்வராஜ், இவரது நண்பர் கண்ணன் சேர்ந்து, கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிந்தனர். இருவரும் வெவ்வேறு கோர்ட்களில் சரணடைந்தனர். இவ்வழக்கு, ராமநாதபுரம் கூடுதல் அமர்வு செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குற்றம் நிரூபிக்கப்படாததால், இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். சாட்சியங்களை வைத்து சரியாக நிரூபிக்காததற்காக, விசாரணை அதிகாரியாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் சவுந்திரபாண்டியன் (தற்போது ராமநாதபுரம் டவுன்) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, டி.ஐ.ஜி., ராமசுப்பிரமணியனுக்கு, மாவட்ட முதன்மை கோர்ட் நீதிபதி சதாசிவம் பரிந்துரைத்தார்.



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை