ரோம்: மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் இத்தாலி சென்ற கடற்படையினர் இந்தியா திரும்ப உள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவில் 2 மீனவர்களை நடுகடலில் சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான இரு இத்தாலி வீரர்கள் , சுப்ரீம் கோர்ட் அனுமதியின் பேரில் இத்தாலி பொதுத்தேர்தலில் ஓட்டளிக்க தாய்நாடு சென்றனர். அவர்கள் இந்தியா திரும்பமாட்டார்கள் என இத்தாலி அரசு முன்னர் அறிவித்தது. திடீர் திருப்பமாக இத்தாலி அரசு வெளியிட்டுள்ள செய்தியில் அவர்கள் இந்தியாவில் நடந்துவரும் வழக்கினை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாகவும், விரைவில் அவர்கள் இருவரும் இந்தியா செல்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.