Farmer buys 'AK-47' for Rs 7 lakh in Punjab | ஸ்கூட்டருக்கு "ஏகே-47' பதிவு எண் பெற ரூ.7 லட்சம் செலுத்திய விவசாயி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஸ்கூட்டருக்கு "ஏகே-47' பதிவு எண் பெற ரூ.7 லட்சம் செலுத்திய விவசாயி

Added : மார் 22, 2013 | கருத்துகள் (22)
Advertisement
Farmer buys 'AK-47' for Rs 7 lakh in Punjab

ஹோஷியார்பூர்: பஞ்சாபில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், அம்மாநிலத்தவர்களுக்கு, "ஏகே-47' மீதுள்ள மோகம் குறைந்தபாடில்லை. ஸ்கூட்டருக்கு, ஏகே - 47 என்ற பதிவு எண்ணை வாங்குவதற்காக, அம்மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி, ஏழு லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

"அவ்டோமேட் கலாஸ்நிகோவ்' என்ற, ரஷ்ய நாட்டவர் கண்டுபிடித்த, துப்பாக்கிக்கு, அவர் பெயரையே சுருக்கி, ஏகே-47 என்ற பெயர் வழங்கப்பட்டது. அந்த கால கட்டத்திலும், இப்போதும், இது புகழ் பெற்று விளங்குகிறது. பஞ்சாபில், பயங்கரவாதம் தலை விரித்தாடிய காலங்களில், இந்த ரக துப்பாக்கிகளைத் தான் பயங்கரவாதிகள் அதிகம் பயன்படுத்தினர். பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர், குல்பீர்; விவசாயி, சமீபத்தில், "ஆக்டிவா' ஸ்கூட்டர் ஒன்றை, 53 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். இதற்கு, ஏகே-47 என்ற, வாகன பதிவு எண்ணை வாங்க ஆசைப்பட்டார். ஆனால், அதே எண்ணைப் பெற, வேறு பலரும் போட்டி போட்டனர். அதனால், அந்த பதிவு எண்ணை ஏலத்தில் விட, ஹோஷியார்பூர் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். ஏலத்தில், 16 பேர் பங்கேற்றனர். இறுதியில், "பிபி-07,ஏகே-47' என்ற பதிவு எண்ணை, 7 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார் குல்பீர்.

ஏலத்தில் வெற்றி பெற்ற, விவசாயி குல்பீர் கூறியதாவது: இத்தாலியில் வசிக்கும் என் சகோதரரும், அமெரிக்காவில் வசிக்கும் என் உறவினரும், "எவ்வளவு விலை கொடுத்தாவது, இந்த பதிவு எண்ணை வாங்கி விடுங்கள்' என, உற்சாகம் அளித்தனர். 13 லட்சம் ரூபாய் வரை, ஏலம் போயிருந்தால் கூட, அந்த எண்ணை நான் வாங்கியிருப்பேன். இந்த எண் மிகவும் பிரபலமானது மற்றும் தனித்தன்மை வாய்ந்தது. ஏற்கனவே, என்னிடம் உள்ள இரண்டு வாகனங்களின் பதிவு எண் - 47 என, உள்ளது. இருந்தாலும், ஏகே-47க்காக, என்ன விலை கொடுக்கவும் நாங்கள் தயாராக இருந்தோம். என்னிடம், "ஸ்கோடா லாரா' கார் தற்போது உள்ளது. விரைவில், "டொயோட்டா' நிறுவன தயாரிப்பான, "பார்சூனர்' கார் வாங்க உள்ளேன். அந்த காருக்கு, இந்த பதிவு எண்ணை மாற்றுவேன். இவ்வாறு குல்பீர் கூறினார். பதிவு எண்ணுக்கான ஏலத்தில், குல்பீர் வெற்றி பெற்றதும், அவரது மனைவியும், மகள்களும் அண்டை வீடுகளில் வசிப்போருக்கு, இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Dindigul,இந்தியா
29-மார்-201310:21:47 IST Report Abuse
Saravanan income tax department அதிகாரிங்க இவன கொஞ்சம் நோட் பண்ணுங்க...
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
23-மார்-201314:12:01 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் அங்கே ஒண்ணும் மழை பொய்க்கலியா ?
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
23-மார்-201312:32:26 IST Report Abuse
Mustafa பசுமை புரட்சியை வெற்றிகரமாக செயல்படுத்திய முதல் மாநிலம் பஞ்சாப், பாஞ்ச் (5) ஆப் (நதி) ஐந்து நதிகள் (ஜீலம், ஜீனாப், ராவி,சட்லஜ்,பீஸ் ) வுள்ள நீர்பாசன கட்டுமானமுள்ள செழிப்பான பூமி பஞ்சாப் அங்குள்ள விவசாயிகளும் கடின வுளைப்பாளிகள் பிச்சைக்காரர்களே இல்லாத ஒரே சமூகம் சீக்கிய சமூகம்தான்.எனவே தயவுசெய்து விவசாயிகளை தரக்குறைவாக விமர்சிக்காதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
23-மார்-201305:45:40 IST Report Abuse
v.sundaravadivelu வெள்ளாமை இல்லாம அவன் அவன் லபோ திபோன்னு அடிசுக்கிறான்.. மழைக் காணோம், மாரியக் காணோம்னு விவசாயிங்க எல்லாம் கண்ணீரும் கம்பலையுமா பொலம்பறாங்க..இவுரு அம்பதாயிரம் ரூபா இஸ்கூட்டருக்கு ஏழு லட்சம் செலவு செஞ்சு நெம்பர் வாங்கராராம்.. இவனை வுற்றாதிங்கடா .. கண்ணா பின்னான்னு ரைடு விட்டு ஒரு மாட்டு மாட்டுங்கடி.. லம்பா அல்லலாம்னு நெனைக்கிறேன்..
Rate this:
Share this comment
Cancel
Senthilkumaran Elangovan - Chennai,இந்தியா
22-மார்-201322:45:51 IST Report Abuse
Senthilkumaran Elangovan இங்கே ஆயிரக்கணக்கான மக்கள் நடைபாதையில்... ஆனால் இவர் வாகன எண்ணுக்கு 7லட்சம்... இந்த பணத்திமிர் பிடித்த முட்டாள்களை யாராலும் திருத்தமுடியாது...
Rate this:
Share this comment
Cancel
tamilan - madurai,இந்தியா
22-மார்-201319:36:08 IST Report Abuse
tamilan எப்பா நீயெல்லாம் விவசாயி இல்லப்பா..நி ஒரு பிசினசு மேகனெட்டு..
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
22-மார்-201317:06:26 IST Report Abuse
GURU.INDIAN மண்ணில் வியர்வை சிந்தி சம்பாதித்து இருந்தால் அதன் அருமை தெரியும் ? பெயருக்கு விவசாயாக இருந்துகொண்டு வேறு தொழில் செய்யலாம் அதன் திமிருதான் இது .
Rate this:
Share this comment
Cancel
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22-மார்-201316:28:51 IST Report Abuse
Angry ஜெய் கஞ்சா விவசாயியா இருப்பான்
Rate this:
Share this comment
Cancel
Subramani - manakkadavu  ( Posted via: Dinamalar Android App )
22-மார்-201316:20:44 IST Report Abuse
Subramani நாங்கள் வல்லரசு ஆயிட்டோம்ல
Rate this:
Share this comment
Cancel
Janu - chennai,இந்தியா
22-மார்-201315:23:50 IST Report Abuse
Janu Correct Mr.Thamizhan......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை