"நடிகர் சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு வழங்கலாம்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"நடிகர் சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு வழங்கலாம்'

Added : மார் 22, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு வழங்க, மாநில கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பத்திரிகை கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மும்பை தொடர் குண்டு வெடிப்பில், சஞ்சய் தத்திற்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. அதே நேரத்தில், உரிமம் இன்றி, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை அவர் வைத்திருந்ததற்காக, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சட்டப்பிரிவு, 161ன் படி, சஞ்சய் தத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யவோ அல்லது தண்டனைக் காலத்தைக் குறைக்கவோ, மாநில கவர்னருக்கு அதிகாரம் உண்டு. அத்துடன், கடந்த, 20 ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளை அவர் சந்தித்துள்ளதால், சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு வழங்கலாம். இவ்வாறு மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
grg - chennai,இந்தியா
22-மார்-201311:09:00 IST Report Abuse
grg mr katju - there are millions in the country who suffer more. in your own state the pundits have become refugees and their suffering is also innumerable. y dont u talk about that? u r extremely partisan. i wonder if u r taking money from some orgn. and talk only against hindus/hindu interests u r always pro-rich. if sanjay is innoncent then y supreme court has punished him - that too after inqury of so many years? y dont u first talk about the ping cases in courts? y dont u talk for abolition of vacation for courts?
Rate this:
Share this comment
Cancel
PRAVEEN - Bangalore,இந்தியா
22-மார்-201309:51:20 IST Report Abuse
PRAVEEN இது மிகவும் அபத்தமானது. சட்டத்தின் முன் அனைவரும் சமமே. தூக்கு தண்டனை பெற்ற இலங்கை தமிழர்களை விடுதலைசெய்ய சொல்லுவாரா இந்த அதிகப்பிரசங்கி.
Rate this:
Share this comment
Cancel
Fa Daf - bangalore,இந்தியா
22-மார்-201307:07:16 IST Report Abuse
Fa Daf கட்ஜு போலீஸ் ஸ்டேஷன் மாதரி ரெகுலர்க துட்டு வாங்கரியா . டெல்லில் சீக்கிய படுகொலை பத்தி கண்டுகொள்ளமால் , டெல்லில் இருந்துகொண்டே குஜராத் இந்து கொலைகளை , எரித்ததை சரி என்று சொன்ன ஆள் , இப்பொழுது சஞ்சய் தத் விட்டுவிடு என்று சொல்கிறாய். எவளவு பணம் கொடுத்து பதவி பிடித்தாய்.
Rate this:
Share this comment
Cancel
sathis_kk - Singapore,சிங்கப்பூர்
22-மார்-201306:40:52 IST Report Abuse
sathis_kk ஒரு பொறுப்புள்ள பதவியில் இருந்தவரின் பொறுப்பற்ற பேச்சு...ஏன் இவருக்கு மட்டும் மன்னிப்பு....அனைத்து குற்றவாளிகளுக்கும் மன்னிப்பு வழங்கிவிடலாம். அப்புறம் கோர்ட் போலிஸ் எதுவும் தேவையில்லை. அதிகபட்ச அதிகாரம் கொண்ட ஒரு நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பை ஒரு மாநில அரசினால் மாற்ற முடியும் என்றால் அந்த நீதிமன்றமே ஒரு தேவையற்றதாகி விடும்.... பேசாமல் உச்ச நீதிமன்றமே இவரை விடுதலை செய்திருக்கலாம்.... "இவர் துப்பாக்கியை திருப்பி கொடுத்துவிட்டார் அதனால் தண்டனை தேவைஇல்லை" என்று தீர்ப்பு கொடுத்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை