Italian marines accused of killing fishermen return to India | பணிந்தது இத்தாலி: இந்தியா வந்தனர் இத்தாலி வீரர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பணிந்தது இத்தாலி: இந்தியா வந்தனர் இத்தாலி வீரர்கள்

Updated : மார் 22, 2013 | Added : மார் 22, 2013 | கருத்துகள் (58)
Advertisement
Italian marines accused of killing fishermen return to India

புதுடில்லி: இந்திய மீனவர்கள் இருவரை, சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர், இன்று இந்தியா வந்தனர் கடந்த ஆண்டு பிப்வரி மாதம் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இரண்டு மீனவர்களை, இத்தாலி கடற்படை வீரர்கள், சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக,மிஸிமிலினோ லதோர், சவ்வேதார் ஜிரோம் ஆகிய இத்தாலி வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தாலியில் நடக்கும் தேர்தலில் ஓட்டளிப்பதற்காக, இவர்கள் பரோலில் செல்வதற்கு, சுப்ரீம் கோர்ட் நான்குவராங்கள் அனுமதித்தது."ஓட்டளித்து விட்டு, அவர்கள் திரும்ப வந்து விடுவர்' என, இத்தாலி தூதர், டேனியல் மன்சினி அளித்த, உத்தரவாதத்தை அடுத்து, சுப்ரீம் கோர்ட், அவர்களை இத்தாலி செல்ல அனுமதித்தது. இந்நிலையில், "பரோலில் சென்ற இத்தாலி வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்துஅவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம். இந்தியாவில் நடக்கும் விசாரணையிலும், அவர்கள் பங்கேற்க மாட்டார்கள்' என, இத்தாலி அரசு, சமீபத்தில் அதிரடியாக அறிவித்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தாலி வீரர்கள், இந்தியாவிற்குதிரும்ப வந்து விடுவர் என, இத்தாலி தூதர் உறுதி மொழி அளித்தார். இதை நம்பித் தான், அவர்களை பரோலில் செல்ல அனுமதித்தோம். தற்போது, அவர்ளை இந்தியாவுக்கு அனுப்பப் போவது இல்லை என, இத்தாலி அரசு அறிவித்துள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டுக்கு அளித்த, உறுதிமொழியை மீறிய, இத்தாலி தூதர், டேனியன் மன்சினி, இந்தியாவிலிருந்து வெளியேற, தடை விதிக்கப்படுகிறது என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்தது. இதனால், இருநாடுகளின் உறவுமுறையில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது. இப்பிரச்னை குறித்து இருநாடுகளும், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என, ஐ.நா., பொது செயலர் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்தனர். இந்த சூழலில், இந்த இரண்டு வீரர்களும், விசாரணைக்காக இந்தியாவிற்கு மீண்டும் அனுப்பிவைக்கப்படுவார்கள் என, இத்தாலி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதன்படி, இரண்டு இத்தாலி வீரர்களும் இன்று டில்லி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுடன் இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சரும் உடன் வந்துள்ளார். அவர்கள் அனைவரும் டில்லியில் உள்ள இத்தாலி தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-201313:36:50 IST Report Abuse
 துவரிமான் சுந்தர் வேற எதுக்கு வரப்போறாங்க இந்தியாவில விருந்து தருறாங்கன்னு சொல்லி கூப்பிட்டு வந்து இருக்கப்போறாங்க
Rate this:
Share this comment
Cancel
PR Makudeswaran - madras,இந்தியா
23-மார்-201308:50:04 IST Report Abuse
PR Makudeswaran இந்த கேடு கெட்டு மானம் கெட்டு பிச்சை கேட்டு அவர்களை வர வைத்த நடவடிக்கைக்கு பெயர் வெற்றியாம் .ராஜ தந்திரமாம்.இனிமேல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை இவர்கள் தான் நிர்ணயம் செய்வார்களா? மானத்தை விற்கும் அரசியல்வாதிகள்.இந்த இழி செயலுக்கு பதில் அவர்கள் வராமலேயே இருந்திருக்கலா.சோனியாவால் இந்திய இறையாண்மைக்கும் தீங்குதான்.ஒருவேளை சங்குதானோ?
Rate this:
Share this comment
Cancel
Nasir Ali Kader - Dammam,சவுதி அரேபியா
23-மார்-201300:09:35 IST Report Abuse
Nasir Ali Kader எந்த நாடு போனாலும் அந்த நட்டு சட்ட திட்டங்களை மதித்து குற்றம் செய்தால் தண்டனை அனுபவிக்கும் இந்தியனை அடுத்த நாடுகள் இரண்டாம் குடியாக பார்க்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் எந்த வெளி நாட்டவனும் v v i p இந்தியன் இங்கும் இரண்டாம் குடி உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் அந்த இட்டலியனுக்கு
Rate this:
Share this comment
Cancel
Nanpan - Pollachi,இந்தியா
22-மார்-201322:24:17 IST Report Abuse
Nanpan இவர்களை இப்போது உள்ள கவர்ன்மென்ட் ஒண்ணுமே செய்யாது. இதே கோர்ட்டோட தொல்லையாலதான் நடந்துள்ளது.இங்க வந்த நாங்க ராஜ மரியாதையோட திருப்பி அனுப்புறோம்னு கெஞ்சிக் கூட்டி வந்திருப்பார்கள். இதுதான் உண்மை. குவற்றோஹிக்கு கிடைத்த மரியாதை தெரியாதா உங்களுக்கு ? என்று உதாரணம் கூறியிருப்பார்கள்.இதை எல்லாம் பார்த்த அவர்களுக்கு வரக் கசக்கவா செய்யும்? வந்திருப்பார்கள் . பின்னர் நடக்கப் போவதை நாம் பார்க்கத்தானே போகிறோம் நண்பன்
Rate this:
Share this comment
Cancel
n.prasanna - Surat,இந்தியா
22-மார்-201320:53:02 IST Report Abuse
n.prasanna when srilanka is going to surrer before india or already surrered before china
Rate this:
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
22-மார்-201320:32:56 IST Report Abuse
LOTUS இதே வேகத்தை பாகிஸ்தான் border இல் நமது வீரனின் தலையை எடுத்த போது காட்ட வில்லையே ? எந்த அரசியல் வாதியும்.........ஏன் supreme கோர்ட் கூட ரிஸ்க் எடுக்கவில்லையே .....பங்களாதேஷ் ஊடுருவல், காஷ்மீர் ஊடுருவல், சீனா ஊடுருவல், என அனைத்து பகுதியிலுமே குடச்சல்கள்................., தெளிவாக முடிவெடுக்க முடியாததால் தானே? ......... இது எப்படி PM ஐ சுற்றியுள்ள 11 பேர் அணியால் மட்டுமே முடியுமா? ................
Rate this:
Share this comment
Cancel
Balagiri - Chennai,இந்தியா
22-மார்-201320:09:20 IST Report Abuse
Balagiri இவர்களை வீரர்கள் என்று அழைப்பதை விடுத்தது கொலை குற்றவாளிகள் என்று இனிமேல் குறிப்பிடுங்கள், அதே போல் ரவுடிகளுக்கு 'இவர்' 'அவர்' என்ற அழைப்பதை தவிர்த்து செய்தி முழுவதும் 'ரவுடி' என்றே குறிப்பிடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
sundararaman - chennai,இந்தியா
22-மார்-201319:35:48 IST Report Abuse
sundararaman வாழ்க இந்திய நீதித்துறை உச்ச நீதி மன்றம் தலையிட்டிராவிட்டால் சோனியா கும்பல் இந்த விஷயத்தை குழி தோண்டி புதைத்திருக்கும். குட்ரோச்சி தப்பிச்சி போன மாதிரி போயிருப்பானுங்க.
Rate this:
Share this comment
Cancel
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
22-மார்-201319:11:36 IST Report Abuse
வைகை செல்வன் அதென்ன இத்தாலிய வீரர்கள்.. இத்தாலிய குற்றவாளிகள் என்று சொல்லுங்கள்.. அதுதான் sari ..
Rate this:
Share this comment
Cancel
subashnaga - sivagangai,இந்தியா
22-மார்-201318:44:37 IST Report Abuse
subashnaga தேவையாதான் நமக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை