சிதம்பரம்:சிதம்பரத்தில், வாலிபரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம், சி.முட்லூரைச் சேர்ந்த, சம்மந்தம் மகன் ”சுரேஷ், 31; அரசு பஸ் நேர காப்பாளர். இவரது அத்தை மகன் கோவிலாம்பூண்டியைச் சேர்ந்த, பெரிசாமி மகன் மணிகண்டன், 23; எலக்ட்ரீஷியன்.இவர்,கடந்த, 19ம் தேதி நள்ளிரவு, சிதம்பரம் ரயில்வே பாலத்தின் கீழ், கழுத்து அறுபட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப் பதிந்து, சுரேஷ் மற்றும் அவரது நண்பர் சிதம்பரநாதனிடம் விசாரித்தனர்.
விசாரணையின் @பாது, ”@ரஷ் அளித்த வாக்குமூலம்:மணிகண்டன், நான், எனது நண்பர்கள் சிதம்பரநாதன், 27, ரமேஷ், 27, ஆகியோர், பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில், மது அருந்தினோம்.சிறிது நேரத்தில், ரமேஷ் சென்று விட்டார்.குடித்துக் கொண்டிருந்த@பாது, மணிகண்டன் என்னை ஆபாசமாக திட்டினான். பின், மணிகண்டன், தனியாக, ரயில்வே மேம்பாலம் கீ@ழ சென்றான். மறுபடியும், மது பாட்டில் வாங்கி, மூவரும் சேர்ந்து, ரயில்வேபாலத்தின் கீழ் மீண்டும் குடித்தோம். அப்@பாதும், மணிகண்டன் என்னை திட்டியதால் ஆத்திரமடைந்து, அவனை கீழே தள்ளி, பிளேடு கத்தியால், கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன் என, தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து, சுரேஷ், சிதம்பரநாதன் ஆகிய இருவரையும், நேற்று போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரரேட் கோர்ட் 2ல், ஆஜர்படுத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.