புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, பட்டப்பகலில் வீடு புகுந்து தனியாக இருந்த கல்லூரி மாணவியை பலவந்தப்படுத்தி கற்பழித்த, லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை அடுத்த, திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்தவர், சகாயம். இவரது மகள், ஜான்சிராணி, 19, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம், பெற்றோர் வெளியே சென்றதால், இவர் வீட்டில் தனியாக இருந்தார்.பக்கத்து வீட்டிலுள்ள, குமார், 27; லாரி டிரைவர். மாணவி தனியாக இருப்பதை மோப்பம் பிடித்த குமார், அவரது வீட்டுக்குள் புகுந்து, ஆசைக்கு இணங்க அழைத்தார்.
மாணவி மறுக்கவே, அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்து, தப்பிச் சென்றார். இரவு வீடு திரும்பிய பெற்றோர் , முகம் முழுவதும் பலத்த காயத்துடன் மகள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து பதட்டமடைந்தனர். காமவெறி பிடித்த வாலிபரால், தனக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் கூறி மாணவி அழுதார்.மகளை தேற்றிய பெற்றோர், இதுகுறித்து, திருக்கோகர்ணம் போலீசில் புகார் கொடுத்தனர். தப்பிச் செல்ல முயன்ற குமாரை, போலீசார் கைது செய்து, நேற்று, புதுக்கோட்டை ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அவரை, 15 நாள் சிறைக்காவலில் வைக்க, நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டதை அடுத்து, புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவி, ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.