தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்து சிவசேனா கட்சியின் ஆட்சி அமையும் என உத்தவ் தாக்கரே கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் பிஹிவான்டி மாவட்டத்தில் கைத்தறி நகரில் சிவசேனா கட்சி சார்பில் பேரணிநடந்தது.இதில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசியதாவது: மகராஷ்டிராவி்ல், காங்,தேசியவாத காங் கூட்டணி அரசில் ஊழல் ஆட்சி நடக்கிறது. தேசியவாத காங்.கட்சித்தலைவர் சரத்பவார், 2014-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் பதவிக்கு கனவு காண்கிறார். தனது உறவினர் அஜித்பவாரை மகாராஷ்டிரா மாநில முதல்வராக்க திட்டமிடுகிறார்.அவரது திட்டம் ஒரு போதும் நிறைவேறாது. தற்போது நடந்து வரும் காங்.-தேசியவாத காங்.கூட்டணி ஆட்சியை அகற்ற வேண்டும். வரப்போகும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அடுத்து அமையப்போவது சிவசேனா கட்சி ஆட்சியின் தான். 2014- தேர்தலுக்கு பின்னர் மத்தியிலும் சிவசேனா செல்வாக்கு பெறும்.இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்..
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.