ராஞ்சி: ஜார்க்கண்டில் தாய், தந்தை ,சகோதரர் உள்பட 6 பேரை கோடாரியால் வெட்டிக்கொன்றவனை பொதுமக்கள் அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு எம்.தமிழ்வாணன் கூறுகையில், ஜார்க்கண்ட் மாநிலம் கவுந்தி மாவட்டத்தைச்சேர்ந்த ஜோசப் தங்கா, கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை வெளியேறினான். நேற்று வீடு திரும்பினான், அப்போது குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டதில், தனது தந்தை அந்தோணி தங்கா, தாய் ஜெயந்தி, சகோதர் சுல்மான், மாமா ஜான், மற்றும் பக்கத்துவீட்டில் வசித்து வந்த இருவர் என 6 பேரையும், கோடாரியால் சரமாரியாக தாக்கி கொன்றான். இதையறித்த கிராம பொதுமக்கள்அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கொலை செய்யப்பட்ட 6 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .குடும்பத்தையே வெட்டிக்கொன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.