சென்னை:சட்டசபையில், நேற்று காலை 10.30 மணியளவில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில், பங்கேற்பதற்காக, 10 மணி முதலே, அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களும், சட்டசபைக்குள் சென்றுக்கொண்டு இருந்தனர். அப்போது, இ.கம்யூ., எம்.எல்.ஏ.,க்களும் கைகளில் பதாகைகளுடன் அங்கு வந்தனர். அதில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும். இலங்கை மீது ஐ.நா., மனித உரிமை கமிஷனில் சர்வதேச பொதுவிசாரணை நடத்த தீர்மானம் கொண்டு வரவேண்டும். இலங்கைத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட, பொதுவாக்கெடுப்பு நடத்த ஆதரவு தரவேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து சட்டசபைக்குள் சென்று நிதிநிலை அறிக்கையில் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.