தி.மு.க., தலைவர் கருணாநிதி :தமிழகத்தின் அனைத்துப் பிரிவினரையும் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியிருப்பதோடு, எந்தத் தரப்பினருக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய ஒன்றாக அமையவில்லை என்பது தான் உண்மை.
ச.ம.க., சரத்குமார் :புதிய வரிகள் இல்லாமல், சீரிய திட்டங்களுடன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், வேலைவாய்ப்புகள் பெருகும்.
ம.தி.மு.க., பொது செயலர் வைகோ:மதுவிலக்கு நடை முறைப்படுத்த வேண்டும் என, தமிழக மக்களின், குறிப்பாக பெண்களின் கோரிக்கையை, தமிழக அரசு அலட்சியப்படுத்திவிட்டது.
மனிதநேய மக்கள் கட்சிஜவாஹிருல்லாஹ் :அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமுதம் அங்காடி மற்றும் கூட்டுறவு பண்டக சாலைகளில், 20 ரூபாய்க்கு, 1 கிலோ அரிசி வழங்கப்படும் என, அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இந்திய குடியரசு கட்சிசெ.கு.தமிழரசன் :எந்த வரிகளும் இல்லாமல், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது. ஏராளமான திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.புதிய தமிழகம் கிருஷ்ணசாமி:நிதிநிலை அறிக்கை குறித்து, பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை. நிதிபற்றாக்குறை ஏற்படுவதற்கு, இந்த வரியில்லாத பட்ஜெட் காரணமாக இருக்கும்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன்:இந்தியாவிற்கே வழிகாட்ட கூடிய வகையில், அ.தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது என்பது, பட்ஜெட் அறிக்கையில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
காங்கிரஸ் :கோபிநாத்நிதிநிலை அறிக்கையில் மக்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் இல்லை. கல்வி மற்றும் வேளாண் துறைக்கு, அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இரண்டு அம்சங்கள் மட்டுமே வரவேற்கத்தக்கதாக உள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.