நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனை, "சி.டி. ஸ்கேன்' பிரிவில், ஒரு மாதத்துக்கு மேலாக, டாக்டர்கள் இல்லை. அதனால், நோயாளிகள், சேலம் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்படும் பரிதாபம் அரங்கேறி வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு செல்லும் வழியில், "சி.டி. ஸ்கேன்' பிரிவு மையம் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில், பல்வேறு உடல் உபாதைகளுக்காக சிகிச்சைக்கு வருவோர், டாக்டர்களின் ஆலோசனைபடி, "சி.டி., ஸ்கேன்' எடுக்க வேண்டும். உள்நோயாளிகளாக இருந்தால், "சி.டி. ஸ்கேன்' செய்வதற்கு, 350 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
புறநோயாளிகளாக இருந்தால், 500 ரூபாய், கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்த கட்டணம் என்பதால், டாக்டர் ஆலோசனைப்படி, நாமக்கல் அரசு மருத்துவமனை, "சி.டி. ஸ்கேன்' மையத்துக்கு, நோயாளிகள் வருகின்றனர். நாள்தோறும், 25 முதல், 30 பேர் வரை, இங்கு, "சி.டி., ஸ்கேன்' செய்து செல்வர். இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனை, "சி.டி.ஸ்கேன்' பிரிவில், இரண்டு டாக்டர்கள் இருந்தனர். அதில், ஒருவர், பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டார். மற்றொரு டாக்டர், நீண்ட விடுப்பில் சென்று விட்டார். அதனால், ஒரு மாத காலமாக, மருத்துவமனையில், "சி.டி. ஸ்கேன்' பிரிவில் டாக்டர்கள் இருப்பதில்லை. எனவே, மருத்துவமனை மூலம், "சி.டி., ஸ்கேனுக்கு' பரிந்துரைக்கப்படுவோர், சேலம் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மருத்துவமனை ஊழியர்கள் சிலர் கூறியதாவது: "சி.டி. ஸ்கேன்' பிரிவில் டாக்டர்கள் இல்லாதாதல், அங்கு ஸ்கேன் செய்தாலும், ரிப்போர்ட் வழங்க ஆளில்லை. இந்நிலை, ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து வருகிறது. அதனால், இங்கு வரும் மக்கள், ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை உள்ளது. இதை, மருத்துவமனை உயரதிகாரிகள் கவனத்தில் கொண்டு, "சி.டி., ஸ்கேன்' பிரிவுக்கு உரிய டாக்டரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.