நாமக்கல்:
இலங்கை தமிழர் பிரச்னையை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம் முழுவதும்,
கல்லூரி மாணவர்கள், வக்கீல்கள், உண்ணாவிரத போராட்டம், ஆர்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
இலங்கை தமிழர் பிரச்னையை வலியுறுத்தி, நாமக்கல் பார்
அசோசியேஷன் சார்பில், வக்கீல்கள், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சங்கத் தலைவர் ராஜூ தலைமை வகித்தார். தொடர்ந்து, நல்லிபாளையம் தபால்
அலுவலகம் முன், வக்கீல்கள், மறியலில் ஈடுபட்டனர். மேலும், தபால்
அலுவலகத்துக்கு பூட்டு போடவும் முயற்சித்தனர். அவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும், ஊர்வலமாக சென்ற வக்கீல்கள், மணிக்கூண்டு அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
*
நாமக்கல் குளக்கரைத் திடலில், இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக கல்லூரி
மாணவர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், 50க்கும்
மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். * ப.வேலூர் காமராஜர் சிலை அருகே,
இலங்கை தமிழர் பிரச்னையை வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள், மக்கள் உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன் உட்பட பலர்
பங்கேற்றனர். * ப.வேலூர் அருகே பாண்டமங்கலத்தில், மாணவர் பேரவை
சார்பில், இலங்கை தமிழர் பிரச்னையை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். * குமாரபாளையம்
ஜே.கே.கே., முனிராஜா, நடராஜா ஃபார்மஸி கல்லூரி மாணவ, மாணவியர், இலங்கை
தமிழர் பிரச்னையை வலியுறுத்தி, அக்கல்லூரி முன், ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.