திருச்செங்கோடு: இலங்கை தமிழர் பிரச்னை வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை தமிழர் பிரச்னையை வலியுறுத்தி, அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பினர் சார்பில், திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து பேரணி நடந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், நாமக்கல் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்கை முற்றுகையிட்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதனால், அப்பகுதியில் சிறிது நேரம், பரபரப்பு ஏற்பட்டது. * திருச்செங்கோடு அண்ணா சிலை முன், தாயகம் திரும்பியோர் அமைப்பு சார்பில், இலங்கை தமிழர் பிரச்னையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பை சேர்ந்த ஏராளமானோர், ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர், இலங்கை தமிழர் பிரச்னையை வலியுறுத்தி, ப.வேலூர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கட்சியின் மாவட்டச் செயலாளர் குமணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. துணைச் செயலாளர் செம்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.